முதலமைச்சரானதுக்கு பின் முதல் முறையாக ரயில் பயணம்..! பொதிகை ரயிலில் தென்காசிக்கு செல்லும் ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Dec 6, 2022, 10:56 AM IST
Highlights

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ரயில் பயணம் மேற்கொள்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
 

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் கடந்த ஒன்றரை ஆண்டில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டியும் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்த மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்வார். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் போது மதுரை அல்லது தூத்துக்குடிக்கு விமானம் மூலம் செல்வார் அங்கிருந்து விழா நடைபெறும் இடத்திற்கு சாலை மார்க்கமாக சென்றிருந்தார். 

ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக..! அண்ணாமலையை கலாய்க்கும் சுப்பிரமணியன் சாமி

தென்காசிக்கு ரயில் பயணம்

இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் முதன்முறையாக வரும் 8ம் தேதி தென்காசி செல்கிறார். இதற்காக வரும் 7ம் தேதி இரவு சென்னையிலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி பயணம் மேற்கொள்கிறார்.சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 8:40மணிக்கு புறப்படும் இரயில் 8ம் தேதி காலை 7.30மணிக்கு தென்காசி சென்றடையும். பின்னர் முதலமைச்சர் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்..

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்..! அதிர்ச்சியில் அதிமுகவினர்..

நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக தென்காசி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மதுரை செல்லும் முதலமைச்சர், இரவு மதுரையில் தங்குகிறார்..பின்னர் 9ம் தேதி காலை மதுரையில் மாநகராட்சி வளைவை திறந்து வைக்கும் அவர், அம்பேத்கர் சிலையையும் திறந்துவைக்கிறார். அன்றைய தினமே விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இதையும் படியுங்கள்

திமுகவிற்கு எதிராக போராட்டம்..! அதிமுக தொண்டர்களுக்கு தன் கையாலயே உணவு சமைத்த ஆர்.பி.உதயகுமார்

click me!