குறி வைக்கப்படுகிறாரா சீமான்..? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சம்மன்..!

By Manikandan S R SFirst Published Oct 15, 2019, 6:07 PM IST
Highlights

ராஜீவ் காந்தி மரணம் தொடர்பாக சீமான் பேசியதில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திலும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 22 ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அப்பாவி மக்கள் 13 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. பலரை இந்த ஆணையம் விசாரித்து வரும் நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இருக்கும் விசாரணை ஆணையத்தில் நாளை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல திமுக எம்.எல்.ஏ கீதாஜாவினுக்கும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசும் போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையை நியாப்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறியிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமானின் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் வழக்கும் பதியப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!