மோடியின் அந்த வேட்டி...! குஷ்புவின் செம்ம கமெண்ட்

By Vishnu PriyaFirst Published Oct 15, 2019, 5:50 PM IST
Highlights

பிரதமர் மோடியின் எல்லா செயல்களையும் விமர்சனம் பண்றது நல்லா இல்லை. தமிழனின் பெருமையை, கலாசாரத்தை பிரதமர் மதித்து வேட்டி அணியும்போது, அது சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனாலும், தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலின் பக்கம், பாதுகாப்பான கடற்கரையில் அவர் குப்பை அள்ளியது விளம்பரமாகத்தான் தோன்றுகிறது. -    குஷ்பூ

* புதுக்கோட்டை மாவட்டம்  கோமங்களம் மாஜி ஊராட்சித் தலைவர் பெரியண்ணன். 52 வயதான இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி இறந்துவிட்ட நிலையில் இப்போது அதே ஏரியாவை சேர்ந்த 16 வயது சிறுமியை  ரெண்டாங்கல்யாணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். இதற்காக சிறுமியின் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சரிகட்டியிருக்கிறார். விவகாரம் சைல்டு லைன் அமைப்பின் கவனத்துக்கு வர, அவர்கள்  இந்த திருமணத்தை தடுத்துள்ளனர். 

* ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரைதான் அ.தி.மு.க. நிலைத்திருக்கும். ஜெயலலிதாவின்  உண்மையான ஆட்சியை கொடுக்கத்தான் அ.ம.மு.க.வை துவக்கியிருக்கிறோம். சிலர் நான் பயந்து ஓடிவிட்டதாக சொல்கின்றனர். அது தவறு. ஜெயலலிதாவுக்கு பின் என்னை தூக்கி நிறுத்தியது தொண்டர்கள்தானே தவிர, தலைவர்கள் இல்லை. -தினகரன் (அ.ம.மு.க. பொதுச்செயலாளர்)

* தமிழக கடல் பகுதியில் பிளாஸ்டிக்கை சுத்தம் செய்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் அவர், தமிழ் மீதும், தமிழகம் மீதும் வைத்துள்ள பற்றை கண்கூடாக பார்க்க முடிகிறது. -பொன்.ராதாகிருஷ்ணன் (மாஜி மத்தியமைச்சர்)

* காமராஜர் உடலை சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக காங்கிரஸார் கோரியதை, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டார்! என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தவறாக பேசி வருகிறார். காங்கிரஸ் தலைவர்களின் ஒப்புதலுடன் தான் கிண்டியில் காமராஜர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. -    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

* தமிழகத்திற்கு வந்திருந்த பாரதப்பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சட்டையை அணிந்திருந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் வேறு எந்த பிரதமரும் தமிழர் பண்பாட்டை அங்கீகரித்தது இல்லை. -    எஸ்.பி.வேலுமணி (உள்ளாட்சித்துறை அமைச்சர்)

* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோடி கோடியாக சலுகை வழங்குகிறது. ஆனால், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு எதுவும் வழங்கவில்லை. ஏழை மக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தால், நாங்கள் மாபெரும் போராட்டம் நடத்துவோம். - ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் நிர்வாகி)

* விபத்தால் நான் தமிழக முதல்வராகிவிட்டேன்! என்று ஸ்டாலின் சொல்கிறார். அது உண்மையில்லை. 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தான் நான் முதல்வராகியுள்ளேன். ஸ்டாலின் தான் கருணாநிதியின் இறப்பு எனும் விபத்தின் மூலம் தி.மு.க. தலைவராகியுள்ளார். - எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

* மேம்பால இரும்புக்கம்பிகளை திருடி, அதை தண்டவாளத்தில் வைத்து ரயில்களேறி உடைய வைத்து துண்டுகளாக்கி, விற்பனை செய்த இருவர் கோயமுத்தூரில் கைது. அதே கோயமுத்தூரில், திருநங்கைகள் போல் வேஷம் போட்டு  வழிப்பறி செய்த இளைஞர்களும் கைது. -செய்தி.

* குற்றம் குறை கூறுவதே ஸ்டாலினுக்கு வேலையாகிப்போச்சு. முன்னாடில்லாம் ‘கோ பேக் மோடி’ன்னு சொல்லிட்டிருந்தார், ஆனா இப்போ ‘கம் பேக் மோடி’ன்னு சொல்றார். நல்லா கவனியுங்க, மோடி- சீன அதிபர் வருகைக்குப் பின் மாமல்லபுரம் குறித்து உலகமே பேசுகிறது. ஸ்டாலினும் இதை புகழ்ந்துதானே ஆகணும். வேற வழியே இல்லை. -    ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)

* பிரதமர் மோடியின் எல்லா செயல்களையும் விமர்சனம் பண்றது நல்லா இல்லை. தமிழனின் பெருமையை, கலாசாரத்தை பிரதமர் மதித்து வேட்டி அணியும்போது, அது சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனாலும், தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலின் பக்கம், பாதுகாப்பான கடற்கரையில் அவர் குப்பை அள்ளியது விளம்பரமாகத்தான் தோன்றுகிறது. -    குஷ்பூ (மகிளா காங்கிரஸின் தேசிய செயலாளர்)

click me!