ப.சிதம்பரத்தை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்... டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Oct 15, 2019, 5:10 PM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தது. இதை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கையை ஏற்க முடியாது.

இதில், குறிப்பாக ஒரே வழக்கில், ஒரே சம்பவத்துக்காக இரண்டு முறை கைது என்பது தேவையில்லாத ஒன்று என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தனது வாதத்தில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைமாறு பெற்றுக்கொண்டு தான் வேறு ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து பல மடங்கு பலன் அடைந்துள்ளார். 

இதையும் படிங்க;-  நள்ளிரவில் இளம் தம்பதியை கொடூரமாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்... அதிரவைக்கும் காரணம்..!

மேலும் ப.சிதம்பரம் இந்த வழக்கில் சி.பி.ஐ காவலில் இருந்திருந்தாலும், பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும், அதனை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்டவை தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால் இதில் அமலக்கத்துறை காவல் விசாரணை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 14 நாட்கள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க;- மந்த நிலை குறித்து புலம்பும் பொருளாதார புள்ளி... சிறைக்குள் இருந்து அதிரும் குரல் மோடிக்கு கேட்குமா..?.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது அமலாக்க துறையினர் ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. திகார் சிறைக்கு அமலாக்க துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

click me!