ஆரம்பமே சக்சஸ்...திரௌபதி முர்முவுக்கு தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன சோனியா.. மம்தா

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2022, 2:58 PM IST
Highlights

பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு சோனியா காந்தி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு சோனியா காந்தி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியின சமூக பெண்மணியான திரௌபதி முர்மு குடியரது தலைவர் பதிவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக சோனியா, மம்தா, சரத்பவார் ஆகியோருக்கு தொலைபேசியில் அழைத்த நிலையில் அவர்கள் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் குடியரசு தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவி காலம்  நிறைவடைய உள்ள நிலையில், 15 வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தேதி அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: திமுக சந்தோஷப்பட வேண்டாம்! உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்- சிவி.சண்முகம்

இந்நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தை, நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பின்னர் வெளியேறிய யஷ்வந்த் சிங்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட, ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோரி வருகிறார். தற்போதைய நிலவரப்படி பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள திரௌபதி முர்முவுக்கே வெற்றி வாய்ப்பு, கணிசமான ஆதரவு இருந்து வருகிறது.

இந்நிலையில் முர்மு இன்று தேர்தல் ஆணையத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் இருந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தனர்.

இந்நிலையில்  எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார்  ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிட் முழு ஆதரவையும் தர வேண்டும் என முர்மு கோரிக்கை வைத்தார். ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்துப் பேசினார்.

இதையும் படியுங்கள்: வாயில் வடை சுட்டது போதும்... இப்ப காட்டுங்க உங்க சமூகநீதியை... ஸ்டாலினை வாண்டடா வம்பிழுக்கும் V.P துரைசாமி.

அப்போது அவருக்கு மூன்று தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். (இத் தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது) அரசியல், கட்சி பாகுபாடின்றி அனைவரும் பழங்குடியின சமூக முர்முவை ஆதரிக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வரும் நிலையில் அவருக்கு சோனியா, மம்தா, சரத்பவார் ஆகியோர் வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!