திமுக சந்தோஷப்பட வேண்டாம்! உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்- சிவி.சண்முகம்

By Ajmal KhanFirst Published Jun 24, 2022, 2:53 PM IST
Highlights

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால், திமுக மகிழ்ச்சி அடைய வேண்டாம் என்றும், உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பொதுக்குழுவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்து உள்ளது. இந்தநிலையில் டெல்லிக்கு சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வம், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் நீதிமன்ற உத்தரவை அடுத்த நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் நிரந்தர அவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் நியமனத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு நான் ஒப்புதல் வழங்கவில்லை.பொதுச் செயலாளர் என்ற பதவி இல்லாததால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. தற்போது அந்த பதவியை நீக்கிவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியில் சட்டவிரோதமாக உருவாக்க முயற்சி நடக்கிறது.  வருகிற ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டும் அதிகாரம் யாருக்கு?

இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவில் சட்ட விதிப்படி தான் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாகவும், 5ல் ஒரு பகுதியினர் ஆதரவு தெரிவித்தால் பொதுக்குழு கூட்டலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், அதிமுகவில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி விவகாரம், உலகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிக்கு நடக்கும் தீர்க்கப்படுவது உண்டு,ஆனில் இதனை தமிழக முதலமைச்சர் விமர்சித்துள்ளார். நேற்று திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மண்டபத்தில் விமர்சையாக நடைபெறுகிறது மற்றொரு மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் என அதிமுகவை  மறைமுகமாக சாடினார்.அதிமுக பிரச்சனையில் முதலமைச்சருக்கு ஏன் வயிறு எறிகிறது. திமுக என்ன ஜனநாயக  முறைப்படி நடக்கும் கட்சியா?முதலில் இந்த கேள்வியை கேட்கும் தகுதி திமுகவிற்கு இல்லை, ஸ்டாலினுக்கும் இல்லையென தெரிவித்தார். ஆனில் அதிமுக அடிப்படை தொண்டர்களால் உருவாக்கப்பட்டுள்ள கட்சி, தொண்டர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் என கூறினார்.

ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றோடு காலி..! இனி அவருக்கு இந்த பதவி தான்...!சிவி.சண்முகம் அதிரடி

உதயநிதிக்கு பட்டாபிஷேகம்..?

சாதாரண கிளைக்கழக பொறுப்பி, ஒன்றிய பொறுப்பு,மாவட்ட பொறுப்பு,மாநில பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்,அமைச்சர், முதலமைச்சர் என பதவி வகித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி,இது போன்று திமுகவில் நடக்குமா, ஜனநாய முறைப்படி நடைபெறுமா? திமுக மன்னர் ஆட்சி, திமுக வாரிசு அரசியல் அப்பா,பிள்ளை கொல்லு பேரன் என அடுத்தடுத்து வருகிறார்கள்.எனவே ஸ்டாலின் ரொம்ப சந்தோஷம் பட வேண்டாம், காலம் விரைவில் வருகிறது நாங்களும் காத்துக்கொண்டிருக்கிறோம். உங்களுடைய அருமை மகன் உதயிநிதிக்கு பட்டாபிஷேகம் பன்னும் போது உங்கள் இயக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்கிறோம், அடுத்து இன்ப நிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது நடக்கும் போகிறது பாரக்கத்தான் போகிறோம் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றோடு காலி..! இனி அவருக்கு இந்த பதவி தான்...!சிவி.சண்முகம் அதிரடி

click me!