தமிழர்களா...! தினகரனுக்கு ஓட்டு போடுங்க.. டுவிட்டரில் கேன்வாஸ் செய்யும் சு.சுவாமி...!  

Asianet News Tamil  
Published : Dec 18, 2017, 08:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
தமிழர்களா...! தினகரனுக்கு ஓட்டு போடுங்க.. டுவிட்டரில் கேன்வாஸ் செய்யும் சு.சுவாமி...!  

சுருக்கம்

Subramanian Swamy said that RK Nagar will vote for Tamils in the by election

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

சென்னை, ஆர்.கே.நகருக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. 

தற்போது ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுக வேட்பாளரான மதுசூதனனுக்கு வாக்கு சேகரிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதேபோல், திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக, அதிமுக, டிடிவி தினகரன் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். 

அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுகவுக்கும் - டிடிவி. தினகரனுக்கும் இடையேதான் நேரடியான போட்டி இருப்பதாக பாஜகவின் செயற்பாட்டாளர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டதாகவும் எனவே தமிழர்கள் டிடிவி.தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!