ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற சந்தோஷத்தை போராடிய மாணவர்கள் அனுபவிக்க முடியாமல் செய்தனர் - ஓபிஎஸ் வேதனை

 
Published : Jan 27, 2017, 02:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற  சந்தோஷத்தை போராடிய மாணவர்கள் அனுபவிக்க முடியாமல் செய்தனர் - ஓபிஎஸ் வேதனை

சுருக்கம்

சட்டசபையில் ஜல்லிக்கட்டில் நடந்த வன்முறை குறித்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டுக்காக உன்னத முறையில் போராடிய மாணவர்கள் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் சமூகவிரோத கும்பல்கள் செய்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.

சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு அளித்தனர், தொடர்ந்து மாநில அரசின் முயற்சியால் மத்திய அரசு, குடியரசு தலைவர் , ஆளுநர் ஒப்புதலோடு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

 இந்நிவையில் நிரந்தர  சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் பீட்டா தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  

அப்போது பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக விரோதிகள் உள்புகுந்து திசை போராட்டத்தை திருப்பினர்.  சமூகவிரோதிகள் தலையீடு இருப்பது தெரிந்து போராட்டம் கைவிட வேண்டும் என மெரினா போராட்டக்களத்தில் இருந்தவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். 

ஜல்லிக்கட்டு நடக்க சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்க , ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக உன்னதமாக போராடிய மாணவர்கள் இளைஞர்களுக்கு அந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல முடியவில்லை, அந்த மகிழ்ச்சியான சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதபடி செய்துவிட்டனர். என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு