சமூக விரோதிகள் ஊடுருவியதே வன்முறைக்கு காரணம் – சட்டசபையில் முதலமைச்சர் விளக்கம்

 
Published : Jan 27, 2017, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
சமூக விரோதிகள் ஊடுருவியதே வன்முறைக்கு காரணம் – சட்டசபையில் முதலமைச்சர் விளக்கம்

சுருக்கம்

ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு விளக்க்ம் அளித்து பேசிய முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் “போராட்டத்தின் ஊடே, சமூக விரோத கும்பல் ஊடுருவியதே வன்முறைக்கு காரணம்” என தெரிவித்தார்.

இது குறித்து சட்ட சபையில் அவர் அளித்த விளக்கம் :

ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு அளித்தனர், தொடர்ந்து மாநில அரசின் முயற்ச்சியால் மத்திய அரசு, குடியரசு தலைவர் , ஆளுநர் ஒப்புதலோடு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

 இந்நிவையில் நிரந்தர  சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் பீட்டா தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  

அப்போது பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக விரோதிகள் உள்புகுந்து திசை போராட்டத்தை திருப்பினர். இந்நிலையில்  சில அமைப்புகள் மெரினாவில் தொடர்நது போராட்டத்தில் ஈடுபட்டு குடியரசு தினத்தை சீர்குலைக்க  உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது . 

போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஒசாமா பின்லேடன் படத்தை கையில் வைத்துக் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரிய புகைப்படம் ஆதாரமும் உள்ளது. 

 சமூகவிரோதிகள் தலையீடு இருப்பது தெரிந்து போராட்டம் கைவிட வேண்டும் என மெரினா போராட்டக்களத்தில் இருந்தவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். 

போராட்டக்குழுக்குள், சமூக விரோதிகள், அமைப்புகள் என பல்வேறு நபர்கள் ஊடுருவினர். போராட்டத்தை  திசை திருப்ப அவர்கள் முயற்சித்து வந்தனர்

அதில் சில பேர் குடியரசு தினத்திற்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதும், தமிழகத்தை  தனிநாடாக மாற்ற வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர், சில பேர் ஒசாமா பின் லேடன் படம் கூட வைத்திருந்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு