
ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு விளக்க்ம் அளித்து பேசிய முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் போலீசார் . சமூக விரோத கும்பல்களை கலைக்கும் போது காவல்துறையினர் அத்துமீறியதாக சில ஊடகங்கள் காணொலி வெளியிட்டது, எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளது இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் தொடங்கியது. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடி குறித்து, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அமைதியாக அறவழியில் போராடிய போராட்டக்கார்ர்கள் மீது, போலீசார் நடத்திய தடியடி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். மாணவர்கள் போராட்டம் மற்றும் தடியடி சம்பவம் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
2006 முதல் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது ஜல்லிக்கட்டு விவகாரம் , கடந்த 16 ஆம் தேதி மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைபெற்றது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக சென்னை உள்ளி்ட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.. சென்னையில் காவல்துறை உயர்அதிகாரிகள் போராட்டகாரர்களிடம் பேசினர்.
அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் 18ஆம் தேதியன்று போராட்டகாரர்களிடம் பேசினர், இதில் அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து விளக்கி அறிக்கை விட்டேன், 19 ஆம் தேதி இது குறித்து பிரதமரை சந்திக்கவுள்ளதையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டேன்.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு அளித்தனர், தொடர்ந்து மாநில அரசின் முயற்ச்சியால் மத்திய அரசு, குடியரசு தலைவர் , ஆளுநர் ஒப்புதலோடு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்நிவையில் நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் பீட்டா தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக விரோதிகள் உள்புகுந்து திசை போராட்டத்தை திருப்பினர். இந்நிலையில் சில அமைப்புகள் மெரினாவில் தொடர்நது போராட்டத்தில் ஈடுபட்டு குடியரசு தினத்தை சீர்குலைக்க உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது .
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஒசாமா பின்லேடன் படத்தை கையில் வைத்துக் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரிய புகைப்படம் ஆதாரமும் உள்ளது. ஜல்லிக்கட்டு அமைப்பினர் ராஜசேகர், ராஜேஷ் , சிவசேனாதிபதி , ஆதி போன்றோர் செய்தியாளர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுகொண்டபோதும் போராட்டம் தொடர்ந்தது.
சமூகவிரோதிகள் தலையீடு இருப்பது தெரிந்து போராட்டம் கைவிட வேண்டும் என மெரினா போராட்டக்களத்தில் இருந்தவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். பின் பல முயற்சிகள் எடுத்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு தமிழ பேரவையில் அவரச சட்டம் சட்டமாகப்படும் என தெரிவித்தேன்
அப்போது போராட்டக்குழுக்குள், சமூக விரோதிகள், அமைப்புகள் என பல்வேறு நபவர்கள் ஊடுருவினர். போராட்டத்தை திசை திருப்ப அவர்கள் முயற்சித்து வந்தனர்
அதில் சில பேர் குடியரசு தினத்திற்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதும், தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர், சில பேர் ஒசாமா பின் லேடன் படம் கூட வைத்திருந்தனர்
அப்போது தான் கும்பல் ஒன்று நடுகுப்பம் ஐஸ்அவுஸ் போன்ற பகுதியை சேர்ந்த சட்டவிரோத கும்பல் காவல் தடுப்புகளை தாண்டி மெரினா வர முயன்றனர், அதே போல் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்திற்கு பெட்ரோல் குண்டு வீசி சேதமேற்படுத்தினர்
ஐஸ்ஹவுஸ், நெடுகுப்பம், ஜாம்பஜார், அம்பேத்கர் பாலம் போன்ற பகுதிகளில் காவல்துறையிரை தாக்கிய போது தங்களிடம் உள்ள குறைந்த பலத்தை வைத்து காவல்துறையினர் அவர்களை கலைத்தனர்
பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் , வாகனங்களையும் சமூக விரோதிகள் கும்பல் சேதப்படுத்தினர்.
காவலர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலவரத்தால் காயமடைந்துள்ளனர், ஏராளமான பொதுமக்கள் வாகனங்களும் காவல்துறை வாகனங்களும் தீ வைக்கப்பட்டது
பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய போதும் துப்பாக்கி சூடூகள் நடத்தாமல் குறைந்த பலத்தை வைத்து கட்டுபடுத்தினர். சமூக விரோத கும்பல்களை கலைக்கும் போது காவல்துறையினர் அத்துமீறியதாக சில ஊடகங்கள் காணொலி வெளியிட்டது, எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளது இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்தார்.