
உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டள்ள புலினை ஏன் கூண்டில் வைத்துள்ளார்கள். அது மிருக வதை இல்லையா? அதை ஏன் வெளியே விடக்கூடாது என பீட்டா அமைப்புக்கு நடிகர் ராமராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் கூட்டம் ஆவடியில் நடந்தது. இதில் அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ராமராஜன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு விளையாட்டு பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. காளையின் கட்டை அவிழ்த்து விடுவார்கள். அது, அதன் உரிமையாளர் வீட்டை நோக்கி ஓடுவிடும். இடையில் அதன் கொம்பில் உள்ள பரிசை சில வாலிபர்கள் பிடித்து எடுப்பார்கள். அப்படி எடுத்தால், அந்த பரிசு அவர்களுக்கு சொந்தம்.
இதுதான் ஜல்லிக்கட்டு. அதற்கு ஏன் தடை போட வேண்டும். இதை மிருகவதை என கூறும் மேனகா காந்தியும், பீட்டா அமைப்பும் தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதித்ததே திமுக ஆட்சியில்தான். 3 ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என குரல் கொடுத்தார்கள் தவிர, யாரும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அவசர சட்டத்தை கொண்டு வந்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை அதிமுக அரசு தகர்த்து எறிந்துவிட்டது.
உயிரியல் பூங்காவில் மான், மயில், யானை உள்பட பல பறவைகளும் சுதந்திரமாகவே இருக்கிறது. இதை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தைகளுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். அதே இடத்தில் புலி, சிங்கம், சிறுத்தையும் உள்ளன. அவற்றை கூண்டில் வைத்து அடைத்துள்ளனர்.
இதை மிருக வதை சட்டம் என கூறி வெளியில் விட முடியுமா..? ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் மூலம் ஜல்லிக்க்கட்டுக்கு அனுமதி பெற்றது அதிமுக அரசுதான். இதை எதிர்க்கட்சிகளால் ஏற்க முடியவில்லை. ஜீரணிக்க முடியவில்லை.
ஜல்லிக்கட்டுக்காக கடந்த 3 ஆண்டுகளாக நீடித்த தடையை நீக்க, தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள, யாரும் முன் வரவில்லை. அவசர சட்டம் அந்த தடையை முதல்வர் ஒ.பி.எஸ். நீக்கியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.