
2017ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த 23ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரை மீதான விவாதம் இன்று நடந்தது.
விவாதத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய வன்முறை, தமிழகத்தின் வறட்சி உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விளக்கம் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் பெயரை குறிப்பிட்டு பேசினர்.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் பற்றி சட்டமன்ற கூட்டத்தில் பேசலாம், சசிகலா கட்சியின் பொருளாளராக இருக்கிறார். அவரை பற்றி பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், “சட்டமன்ற கூட்ட விவாதத்தில், சசிகலா குறித்து பேச, அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமை இருக்கிறது என தெரிவித்தார்.