தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன மா.சுப்பிரமணியன்!!

Published : May 02, 2022, 08:28 PM IST
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன மா.சுப்பிரமணியன்!!

சுருக்கம்

மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தான் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தான் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்த பின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதனிடையே மதுரை மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமிக்கு டீன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை அடுத்து கல்லூரி டீன் பொறுப்பை கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த மார்ச் 11 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் சமஸ்கிருதத்தில்  சரக் சப்த் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தான் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இந்திய ஒன்றியத்திலேயே முதல் முறையாக, தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கு என்று விரைவில் தனி பல்கலைக்கழகம் துவங்கி, சித்த மருத்துவ கல்லூரி நிறுவப்பட உள்ளது. நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்த மருத்துவமனையும், அடுத்த ஆண்டு சித்த மருத்துவ கல்லூரியும் நிச்சயம் தொடங்கப்படும். மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது.

ஒரு காலக்கட்டத்தில் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவராக வேண்டும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் அவை அனைத்தும் இப்போது மாற்றப்பட்டுள்ளது. மாணவர்களை சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்க செய்த கல்லூரி முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 36 மருத்துவ கல்லூரிகளுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உறுதிமொழியை ஆங்கிலத்திலோ அல்லது தமிழில் மொழிபெயர்ப்பு செய்தோ மாணவர்களை ஏற்க செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மட்டுமே 8 ஆயிரத்து 50 மாணவர்கள் முதலாமாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 555ஆக உள்ளது. இந்த மாணவர்களுக்கு கையடக்க கணினி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!