இசைஞானி இளையராஜாவை இழிவுபடுத்திய பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கைது செய்ய கோரி அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவை இழிவுபடுத்திய பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கைது செய்ய கோரி அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், பிரதமர் மோடி தலைமையில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை கண்டு, அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என கூறியிருந்தார். இதையடுத்து, எதிர்க்கட்சியினர் இளையராஜாவை கடுமையாக விமர்சித்தனர். இதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். ஆனால், தனது கருத்தை திரும்ப பெறப்போவதில்லை என இளையராஜா கூறியுள்ளார். இந்நிலையில் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழகத்தில் சில அகராதிகள் இருக்கிறாங்க. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள்.
undefined
இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது. வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும், புகழும் வந்த பிறகு தன்னை உயர்ஜாதி என நினைத்து கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்.. வயது 80க்கு மேல் ஆகப்போகிறது. கேட்டால் இளையராஜாவாம் என்று சரமாரியாக சாடினார். இதனிடையே இசைஞானி இளையராஜா அவர்களை பற்றி சாதியை குறித்து இழிவுபடுத்திய பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய கோரி அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 22ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இசைஞானி இளையராஜாவை சரமாரியாக விமர்சித்திருந்தார்.
அவர் பேசும் போது தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்காங்க கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள். இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது என்று தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல் அவருடைய சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருக்கிறார். மேலும் பணம் வந்துவிட்டால் நீ உயர் சாதி ஆகிவிட முடியாது என்றும் விமர்ச்சித்திருந்தார். அதனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். மேலும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய ஆடியோவும் இணைத்து காவல்துறை ஆணையரிடம் வழங்கி இருப்பதாகவும் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தெரிவித்தார்.