சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை... தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்!!

Published : May 02, 2022, 08:02 PM IST
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை... தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்!!

சுருக்கம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சர்ச்சை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. 

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சர்ச்சை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் 68 ஆவது குழுவாக இணைந்த 250 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்த பின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

தன்னிச்சையாக விதி மீறி ஹிப்போகிரேடிக் உறுதி மொழிக்கு பதிலாக சம்ஸ்கிருத உறுதி மொழி எடுத்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே மதுரை மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமிக்கு டீன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை அடுத்து கல்லூரி டீன் பொறுப்பை கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவக் கல்லூரி டீனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர்கள் சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுக்குறித்த கடிதத்தில், தேசிய மருத்துவ கவுன்சிலின் சுற்றறிக்கையின் படியே சரக் சப்த் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. மேலும் அந்த உறுதிமொழி ஆங்கிலத்தில் தான் எடுக்கப்பட்டது. எனவே, மருத்துவக் கல்லூரி டீன் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட மாணவர்களும் இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர். இதனிடையே கடந்த மார்ச் 11 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் சமஸ்கிருதத்தில்  சரக் சப்த் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக சர்ச்சை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!