குறிப்பாக இந்த இரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் தகவல்.

Published : Jul 06, 2021, 10:18 AM IST
குறிப்பாக இந்த இரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் தகவல்.

சுருக்கம்

அந்த வகையில், 2019-2020-ம் கல்வியாண்டுக்கான UDISE தரவுகள் சமீபத்தில் வெளியானது. அதில், நாடு முழுவதும் 25 சதவீத பழங்குடியின மாணவர்கள் 9 மற்றும் 10-ம் வகுப்புகளை நிறைவு செய்யாமலேயே வெளியேறியதாகவும்,

கடந்த 2019-2020-ம் கல்வியாண்டில் 20% தலித் மாணவர்களும், 25% பழங்குடியின மாணவர்களும், பாதியிலேயே பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது நாடு முழுவதும் ஒவ்வோர் கல்வியாண்டிலும், பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை,  பாதியிலேயே பள்ளிப் படிப்பை  கைவிடுகின்ற மாணவர்களிற் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்த புள்ளிவிவரங்களை UDISE வாயிலாக  மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், 2019-2020-ம் கல்வியாண்டுக்கான UDISE தரவுகள் சமீபத்தில் வெளியானது. அதில், நாடு முழுவதும் 25 சதவீத பழங்குடியின மாணவர்கள் 9 மற்றும் 10-ம் வகுப்புகளை நிறைவு செய்யாமலேயே வெளியேறியதாகவும், 20 சதவீத தலித் மாணவர்கள் 9,10-ஆம் வகுப்புகளில் இருந்து இடை நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸாமில் 34.4 சதவீதமும் மத்திய பிரதேசத்தில் 26.8 சதவீதமும், குஜராத்தில் 24.1%, ஒடிஷாவில் 24%, டெல்லியில் 21.5% என்ற அளவில் 9, 10-ஆம் வகுப்புகளில் பட்டியலின மாணவர்கள் இடை நின்றுள்ளது தெரியவந்துள்ளது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடைநிற்றல் சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனாலும் கேரளாவில் ஐந்தில் ஒரு பழங்குடி மாணவரும், தமிழ்நாட்டில் ஐந்தில் மூன்று பழங்குடியின மாணவரும், பள்ளியை விட்டு 9,10-ஆம் வகுப்புகளில் இடைநின்றுள்ளதாகவும், UDISE புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சராசரியாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை என்பது 16.1 சதவிகிதமாக உள்ளது. தலித் மாணவர்களை விட பழங்குடி மாணவர்களை பள்ளிகளில் தொடர்ந்து தக்கவைக்க ஏதுவான சமூக, பொருளாதார, கற்றல் - கற்பித்தல் சூழல் இல்லாததே மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்க காரணம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!