தமிழகத்துடன் பேச்சு நடத்துவது கர்நாடாகவின் கவுரவத்துக்கு இழுக்கு... காங்., தலைவர் சிவகுமார் ஆணவ பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Jul 6, 2021, 10:14 AM IST
Highlights

மேகதாது திட்டப்பணிகளை துவங்குவதை விட்டு தமிழகத்துடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியமென்ன? மேகதாது திட்டம் பெங்களூருக்கு மிகவும் முக்கியமானது.

மேகதாது விஷயத்தில் முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு செல்வது கர்நாடக மாநிலத்துக்கு கவுரவம் தரக்கூடியதல்ல'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

 

கர்நாடக மாநிலம், மங்களூரில் அவர் இதுகுறித்து கூறுகையில், ’’தமிழகத்தில் எந்த அரசு பதவிக்கு வந்தாலும் மாநில விவகாரத்தில் ஒன்றாக சேர்ந்து விடுகின்றனர். எனவே முதல்வர் எடியூரப்பாவும் நம் மாநிலத்தின் நலனை காக்க வேண்டும். மேகதாது அணை திட்டத்துக்கு உடனடியாக டெண்டர் அழைத்து பணிகளை துவங்க வேண்டும். உச்சநீதிமன்றமும் கூட இதைத்தான் கூறியுள்ளது.

மேகதாது திட்டப்பணிகளை துவங்குவதை விட்டு தமிழகத்துடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியமென்ன? மேகதாது திட்டம் பெங்களூருக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் அரசு இருந்த போது திட்டம் வகுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் கிடைத்துள்ளது. அது நம் திட்டம். மேகதாது விஷயத்தில் முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கிறார். சமாதான பேச்சுக்கு செல்வது நம் மாநிலத்துக்கு கவுரவம் தரக்கூடியதல்ல’’என அவர் தெரிவித்தார். 

click me!