நாங்க அப்பவே சொன்னோம் கேட்டீங்களா ? கொந்தளிக்கும் தூத்துக்குடி மக்கள்….ஸ்டெர்லைட் ஆலையில் என்ன நடந்துச்சு தெரியுமா ?

 
Published : Jun 18, 2018, 06:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
நாங்க அப்பவே சொன்னோம் கேட்டீங்களா ? கொந்தளிக்கும் தூத்துக்குடி மக்கள்….ஸ்டெர்லைட் ஆலையில் என்ன நடந்துச்சு தெரியுமா ?

சுருக்கம்

sterlite factrory gas leak thuthukudi

மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த ஆலையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் பொது மக்கள் தற்போது ரசாயன கசிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தூத்துக்குடியில் கடந்த 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது  ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து சமூக ஆர்வலர்கள் அதனை மட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாள் கலவரம் வெடித்தது, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில் ஸ்டெர்லைட்  ஆலையில் நேற்று திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு  ஆலையில் ஆய்வு செய்தது.

இந்நிலையில், ஆலையில் லேசான சந்தக அமில கசிவு  ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து கந்த அமில கசிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சரி செய்யப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். ஆனாலும் ராசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால் தூத்துககுடியில்  பரபரப்பான சூழல் நிலவுகிறது.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..