மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை - மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Jun 29, 2023, 4:08 PM IST

பெரும்பான்மையான மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசானது பயன்படுத்துவதில்லை என்று  மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில்  மத்திய அரசு திட்டப்பணிகள் தொடர்பாக  அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி  அலுவலகத்தில்  மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த ஆய்வின் போது குடிநீர் இணைப்பிற்காக  முன்வைப்புத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பு பிரிவினர்களிடமும் முன்வைப்புத் தொகையானது வசூல் செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களிடமும் வசூல் செய்துள்ளது. இந்த முறையானது ஜல்ஜீவன் திட்டத்திற்கு எதிரானது.

Tap to resize

Latest Videos

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை - பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு  அனைவருக்கும் குடிநீர், அவர்கள் வீடுகளுக்கே சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வின் போது குடிநீரில் உப்புத்தன்மை உள்ளது என்று மக்கள் புகார் தெரிவித்தனர். அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சுத்தமான  குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கலைஞர் கைது செய்யப்பட்ட போது நாயை விட மோசமாக நடத்தப்பட்டார் - நீதிபதி பரபரப்பு பேச்சு

மேலும், பெரும்பான்மையான மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசானது  பயன்படுத்துவதில்லை. வங்கியாளர்களிடம் ஸ்டார்ட் அப் மற்றும் ஸ்வாநிதி திட்டங்களின் தரவுகள் இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வுகள் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

அங்கன்வாடியில் ஆய்வு மேற்கொண்ட போது நிலத்தடி நீரை தூய்மை படுத்தாமல் நேரடியாக அருந்துவதாகவும், அதனால் அனைத்து அங்கன்வாடி மைய அதிகாரிகளிடமும் நீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டுமென அறிவித்தி உள்ளேன். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மக்கும் குப்பைகளை உரமாக தயாரிக்கும் இடமானது மக்கள் குடியிருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அவர்களுக்கு மிகவும் பாதிப்பாக உள்ளது. அதனை நகருக்கு வெளியில் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் தாங்கள் வெற்றி பெறுவோம். அடுத்த வாரத்தில் இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணைந்து ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்க உள்ளார்கள். பாதயாத்திரை முடிந்த பிறகு தாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடத்தில் வெற்றி பெறுவோம் என துல்லியமாக தெரிவிப்போம்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரத ஜனதா கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளது. அவர்கள் இன்னும் பிரதம வேட்பாளர் யார் என்று அறிவிக்கவில்லை. தங்கள் கட்சியானது கீழ் நிலையில் இருந்து அனைத்து பிரிவுகளிலும் வேலை செய்து வருகிறது. அதனால் தங்கள் கட்சி தான் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

click me!