தம்மை கைது செய்த போது கருணாநிதி மிகவும் தைரியமாக இருந்தார் - எம்.பி. வில்சன் பேச்சு

By Velmurugan s  |  First Published Jun 29, 2023, 1:52 PM IST

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அவர் தைரியமாக இருந்ததாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார். 


சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் "நள்ளிரவில் கலைஞர் கைது" என்ற புத்தகத்தை முன்னாள் நீதிபதி கே.சந்துரு மற்றும் மூத்த வழக்கறிஞரும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் ஆகியோர் வெளியிட்டனர். இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் பேசுகையில், தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்ட போது எவ்வளவு அத்துமீறல் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 

Tap to resize

Latest Videos

கைது செய்யப்பட்ட கலைஞர் கருணாநிதியை நேரில் பார்க்க நான் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட கலைஞர் நீதிபதி அசோக்குமார் இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். நீதிபதி கலைஞர் கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டார். 

கலைஞர் கைது செய்யப்பட்ட போது நாயை விட மோசமாக நடத்தப்பட்டார் - நீதிபதி பரபரப்பு பேச்சு

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கும் காயம் ஏற்பட்டது. முன்னாள் முதல்வரை சரியாக நடத்தவில்லை. கைது செய்யப்பட்ட பிறகு கலைஞர் உடன் நானும் காரில் சென்றேன். அந்த கார் மருத்துவமனைக்கு செல்லாமல் சிறைக்கு சென்றது. அப்போது கலைஞர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மருத்துவ சிகிச்சை செய்யாமல் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டது ஏன்?

பிறகு சிறிது நேரம் கழித்து எனக்கும், அங்கிருக்கும் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். இது மிகவும் கொடூரமான தாக்குதல். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இது நடத்தப்பட்டது. சிறையிலும் கலைஞர் கருணாநிதி தைரியமாக இருந்தார். 

வேலை வாங்கி தருவதாக கூறி கிராம பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த ஊர் தலைவர்; கடலூரில் பரபரப்பு

மொத்தமாக 5 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த சம்பவங்களை சுரேஷ்குமார் அழகாக புத்தகத்தில் கொண்டு வந்துள்ளார்.‌ ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருக்கும் போது எப்படி நடக்க வேண்டும் என்று உணர வேண்டும். இந்த புத்தகத்துக்கு முன்னாள் நீதிபதி சந்துரு முகவுரை எழுதி உள்ளார். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் என்னது நடந்தது என அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் இதை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. கலைஞர் மீதான வழக்கு முழுக்க முழுக்க பொய்யான புகார். இது ஒரு நல்ல புத்தகம். கலைஞர் கருணாநிதியை குறித்து வருங்கால சந்ததியினர் புரிந்து கொள்ளும் வகையில் இந்த புத்தகம் இருக்கிறது என்றார்.

click me!