தமிழ்நாட்டின் 49வது தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்.. யார் இவர்?

By vinoth kumar  |  First Published Jun 29, 2023, 1:49 PM IST

தமிழக தலைமைச் செயலர் இறையன்பு 1988ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அடுத்த தலைமைச் செயலர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தமிழகத்தில் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுவதை அடுத்து அந்த பொறுப்புக்கு சிஷ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக தலைமைச் செயலர் இறையன்பு  1988ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அடுத்த தலைமைச் செயலர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் மூன்று பேர் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போதைய தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 1986ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக  தலைவராக உள்ளார். அடுத்தது, 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த்துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார். மூன்றாவது, இதே 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கலைஞர் கைது செய்யப்பட்ட போது நாயை விட மோசமாக நடத்தப்பட்டார் - நீதிபதி பரபரப்பு பேச்சு

இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனாவே தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகின. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தற்போது வெளியாகியுள்ளது. சிவ்தாஸ் மீனா தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் 49வது தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டு தாக்கப்பட்டாரா? நடந்தது என்ன? மறுக்கும் அறநிலையத்துறை.!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் மீனா 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கியவர். காஞ்சிபுரம் உதவி ஆட்சியராக பணியை தொடங்கிய சிவ்தாஸ் மீனா கோவில்பட்டி உதவி ஆட்சியர், வேலூர் கூடுதல் ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகத்துறை, போக்குவரத்துறை மற்றும் கூட்டுறவு, உணவு நுகர்வோர் துறையின் முதன்மை செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளை பதவிகளை வகித்தவர். 

இதையும் படிங்க;-  கூல்டிரிங்சில் மயங்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்! என் வாழ்க்கையின் நாசம் பண்ணிட்டியே கதறல்..!

click me!