கலைஞர் கைது செய்யப்பட்ட போது நாயை விட மோசமாக நடத்தப்பட்டார் - நீதிபதி பரபரப்பு பேச்சு

By Velmurugan s  |  First Published Jun 29, 2023, 1:33 PM IST

கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது வரலாற்றில் முக்கியமானது; கலைஞர் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கே.சந்துரு தெரிவித்துள்ளார். 


சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் "நள்ளிரவில் கலைஞர் கைது" புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசுகையில், நான் இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறேன். ஒரு ஊடகவியலாளர் தான் பார்த்ததை அப்படியே எழுதி ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியம். அப்படி பத்திரிகையாளர் சுரேஷ் குமார்‌ கலைஞர் கருணாநிதி கைதை புத்தகமாக எழுதியது வரவேற்கத்தக்கது. 

Latest Videos

undefined

கலைஞர் கருணாநிதி கைது என்பது வரலாற்றில் முக்கியமானது. 2021-ம் ஆண்டு கலைஞர் நள்ளிரவில் கைதில் வரலாற்றில் முக்கியம். 2001-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு அந்த அம்மையார் ஆடாத ஆட்டம் இல்லை. கலைஞர் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நண்பர் சுரேஷ்குமார் நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளார். 

வேலை வாங்கி தருவதாக கூறி கிராம பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த ஊர் தலைவர்; கடலூரில் பரபரப்பு

அவரது கைது சட்டப்படி நியாயமா? முன்னாள் முதல்வர் கலைஞரை நாயை விட மோசமாக கைதின் போது நடத்தி இருக்கிறார்கள். அப்படி இந்த கைதின் போது நீதிபதி சுரேஷ்குமார் இந்த கைதில் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். நடைமுறையில் சாதாரண மக்கள் கைது செய்யப்படும் பொழுது மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். கலைஞர் கைது ஒரு தவறான முன்னுதாரணம். 

Crime News Today: உறங்கியவரிடம் பணம் பறிப்பு; எதிர்ப்பு தெரிவித்த காவலாளி அடித்து கொலை - புதுவையில் பரபரப்பு

அப்போது மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலைஞரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளித்தார். அப்போது தமிழக ஆளுநர் மாற்றப்பட்டார். இப்போதும் ஒரு ஆளுநர் இருக்கிறார். கலைஞர் கைதின்போது மாநில ஆளுநர் தனது பொறுப்பை சரியாக உணர்ந்து செயல்படவில்லை என்றார்.

click me!