தமிழகத்தை கடந்து ஹைதராபாத்திலும் ஸ்டாலின் புகழ். தலையில் வைத்து கொண்டாடிய விஷால்.. அதிமுகவுக்கு எதிரி அல்ல.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2021, 9:25 AM IST
Highlights

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோரால் சினிமாத்துறைக்கு நல்லது நடக்கும் என்று நம்புவதாகவும், தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோரால் சினிமாத்துறைக்கு நல்லது நடக்கும் என்று நம்புவதாகவும், தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலின் 44-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு தனது பிறந்த நாளை கொண்டாடிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோயில்களை விட புனிதமான இடம் இது என்பதால் தனது பிறந்தநாளை கொண்டாட முதியோர் இல்லத்திற்கு வந்ததாக கூறினார். அதேபோல தனது பிறந்த நாளில் நிறைய நல்ல விஷயங்கள் நடப்பதால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் விஷால் கூறினார்.

 

அதேபோல, நடிகர் வடிவேல் மீதான தடை நீங்கியது தொடர்பாகவும், அவர் மீண்டும் நடிக்க வருவது குறித்து கருத்து தெரிவித்த விஷால், ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும், அவர் மேலும் பல படங்களை நடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் கூறினார்.நடிகராக அறிமுகமாகி பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளராகவும், அதைத்தொடர்ந்து  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோரால் திரைத்துறைக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் சங்கம் வழக்கு நிலுவையில் இருப்பதால் கொரோனா காலத்தில் உயிரிழந்த திரை கலைஞர்களுக்கு கூட உதவு முடியவில்லை என்றும் விஷால் வேதனை தெரிவித்தார். மேலும் கடந்த 100 நாட்க்களில் திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின் நல்லது செய்வார் என்பதால்தான் மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் எதிர்பார்த்தபடியே அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். இப்போது தமிழகத்தை கடந்த ஹைதராபாத்திலும் கூட ஸ்டாலின் ஆட்சி குறித்து மக்கள் வியந்து பேசுவதாக கூறிய விஷால், தான் திமுகவுக்கு ஆதரவாக  பேசுவதால் அதிமுகவுக்கு எதிரானவன் என யாரும் நினைக்க வேண்டாம் என அவர் கூறினார்.
 

click me!