கொரோனா நெருக்கடியிலும் சிறப்பாக செயல்படுவார் ஸ்டாலின்.. வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்த சரத்குமார்.

Published : May 06, 2021, 12:01 PM IST
கொரோனா நெருக்கடியிலும் சிறப்பாக செயல்படுவார் ஸ்டாலின்.. வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்த சரத்குமார்.

சுருக்கம்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க. ஸ்டாலின் சந்தித்து உரிமை கோரிய நிலையில், ஆளுநரும் பதவியேற்க ஸ்டாலினை அழைத்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  தமிழக முதல்வராக பொறுப்பேற்றக்க உள்ள திமுக தலைவர்  மு. க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கொரோனா பரவி வரும் இந்த நெருக்கடியான நேரத்தில் அவர் சிறப்பாக பணியாற்றுவார் எனவும் அவர் கூறினார். 

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் (133 சட்டமன்றத் தொகுதிகள்) திமுக வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில்  திமுக எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க. ஸ்டாலின் சந்தித்து உரிமை கோரிய நிலையில், ஆளுநரும் பதவியேற்க ஸ்டாலினை அழைத்துள்ளார். இந்நிலையில்  வருகின்ற ஏழாம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சராக ஸ்டாலின்,
ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக பல்வேறு அரசியில் கட்சி தலைவர் பிரபலங்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார், மேலும் கொரோனா தொற்று அதிக அளவு பரவிவரும் சூழலில் பதவி ஏற்க்க உள்ள அவர் சிறப்பாக பணியாற்றுவார் என நம்புவதாக கூறினார். சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்ற அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார். 

 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!