#BREAKING பாஜக மூத்த தலைவர் பொன்னாருக்கு கொரோனா.. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : May 06, 2021, 11:33 AM IST
#BREAKING பாஜக மூத்த தலைவர் பொன்னாருக்கு கொரோனா.. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 150ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று அறிகுறி  ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!