
அச்சுறுத்தல் காரணமாக சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஏற்கனவே மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. கோவிஷீல்ட் தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா மிரட்டல்களுக்கு பயந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். இத்தனைக்கும் இவருக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர், ‘’கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டை விரைந்து தருமாறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் மிரட்டல் விடுகின்றனர். எனக்கும், குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை என்று மும்பை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே மத்திய அரசு ‘ஒய்’பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ள நிலையில் தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.