அமித்ஷா மகனுடன் என்ன பேசினார் ஸ்டாலின்… அதிரும் அரசியல் களம்!!

By Narendran SFirst Published Nov 20, 2021, 6:45 PM IST
Highlights

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாராட்டு விழாவில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று கைகொடுத்த நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாராட்டு விழாவில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று கைகொடுத்த நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் திட்டம் என்று பிரதமர் மோடி ஓராண்டாக கூறிவரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதுமட்டுமின்றி டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் செங்கோட்டை முற்றுகை, டிராக்டர் பேரணி, ரயில் மறியல், பல மாதங்களாக சாலைகள் மூடல் என விவசாயிகள் போராட்டம் குறித்த தகவல் நாடு முழுவதும் பரவியது. இது ஒருபுரம் இருக்க தமிழகத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறிவந்ததாக கூறப்படுகிறது.

மேலும் வேளாண் சட்டங்களுக்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்தது. அப்போதைய எதிர்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பிறகு தமிழகத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்று மாதங்களில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டிருப்பது மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் இடையே மரியாதையை பெற்று தந்துள்ளது. பாஜகவினருக்கும் பாஜகவிற்கும் எதிரானவர் போல ஸ்டாலினை சித்தரிக்கும் சிலர் அதனை அவ்வப்போது வெளிகாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை பெற்றதற்காக தோனிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் , இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் அமித்ஷாவின் மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷா உரையாற்றினார். பின்னர் அவரது இருக்கைக்கு திரும்பும் போது மு.க.ஸ்டாலின் அவருக்கு எழுந்து நின்று கைகொடுத்தார். அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில் ஸ்டாலினின் இந்த செயல் இது அரசியல் கணக்கா அல்லது மேடை நாகரீகமா என அனைவரையும் எண்ண வைத்துள்ளது.

click me!