கரூர் பள்ளி மாணவி தற்கொலை… குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published Nov 20, 2021, 5:34 PM IST
Highlights

குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை எதிர்க்கவும், எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை எதிர்க்கவும், எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கல் குறைவதற்குள் மேலும், ஒரு அதிர்ச்சி சம்பவமாக, கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி எழுதிய அந்தக் கடிதத்தில், பாலியல் தொல்லையால் சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கணும். என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழரதுக்கு ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போரேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை ஆனா முடியல. ஐ லவ் அம்மா, சித்தப்பா, மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும், ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன். மன்னிச்சுருங்க என்றும், இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது என்றும், சாரி மச்சான் சாரி என குறிப்பிட்டிருக்கிறார். இந்த கடிதம் அனை அவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை எதிர்க்கவும், எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில், பாலியல் தொல்லை காரணமாக கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி, மிகுந்த சோகத்தை ஏற்படுத்துவதாகவும் குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை எதிர்க்கவும் எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அவல நிலையை மாற்ற, இனியும் இம்மாதிரியான கொடும் சம்பவம் நிகழாமல் தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கோவை, கரூர் என அடுத்தடுத்து நிகழும் பாலியல் தொல்லைகளும் அதனால் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!