விடுதலைப் புலிகள் குறித்து பேச்சு… நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோர்ட்டில் ஆஜர்..!

Published : Nov 20, 2021, 04:27 PM ISTUpdated : Nov 20, 2021, 04:34 PM IST
விடுதலைப் புலிகள் குறித்து பேச்சு… நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோர்ட்டில் ஆஜர்..!

சுருக்கம்

கடந்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக, தொடுக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழ் தேச பொதுவுடமை கட்சி சார்பில் தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் விடுதலை புலிகள் குறித்து ஆதரவாக பேசியதாகவும், தமிழீழ விடுதலை புலிகள் கட்சி தலைவர் பிரபாகரனை புகழ்த்து பேசியதாகவும் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கு ஈரோடு மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக காவல் துறையினரால் குற்றப்பத்திரிக்கையும் சமர்பிக்கப்பட்டு, அதற்கான நகர் இவர்கள் மூவரிடம் இச்சூழலில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய சீமான், மணியரசன், கொளத்தூர் மணி ஆகிய மூவரும், ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தான் இலங்கை சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர்தொடங்கிய காலம் . அப்போது தான் பிரபாகரனை சீமான் சந்தித்துப் பேசினார் என கூறப்படுகிறது. அதற்குப் பின் ராமேஸ்வரத்தில் சீமான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இதேபோன்று கருங்கல்பாளையத்தில் பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டார். அதற்குப் பின் அவர் பிணையில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று என்று கூறி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லாமல் அனைத்து தேர்தல்களிலும் தனித்து களம் கண்டு வருகிறது. மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் சமரசமிற்ற பாஜக, காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளை விமர்சிக்கும் சீமான் பேச்சு வீடியோக்கள், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகுவது உண்டு. தமிழீழ விடுதலை புலிகள் கட்சி தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொண்ட சீமான், தமிழ்நாட்டினை தமிழனே ஆள வேண்டும் எனும் முழங்கி வருகிறார். இதனிடையே தமிழ் விடுதலை புலிகள் குறித்து ஆதரித்து பேசியதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில், கோர்ட்டில் இன்று ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

PREV
click me!

Recommended Stories

நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
தோல்வி பயத்தால் தொகுதி மாறும் செந்தில் பாலாஜி..? கோவை தான் அடுத்த டார்கெட்.. பக்கா ஸ்கெட்ச் போட்ட திமுக