ஸ்கெட்ச் போட்டு, எகிறி அடித்த ஸ்டாலின்.. வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்.. அதிர்ந்தது சட்டமன்றம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2021, 12:09 PM IST
Highlights

வேளாண் தொழில் பெருகவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, இம்மாநிலத்தின் வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து, வேளாண்மை துறையின் பெயரினை வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை என மாற்றி ஒரு உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லாத இந்த புதிய வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் வட மாநில விவசாயிகள் தீவிர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அதை பிரதிபலிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். மத்திய பாஜக அரசு வேளாண் துறைகளுக்கான மூன்று சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. விவசாய விளை பொருட்களுக்கான வணிக ஊக்குவிப்பு மற்றும் வசதி அளித்தல் சட்டம், விவசாயிகள் விலை உறுதி செய்தல் மற்றும் வேளாண் சேவைகளுக்கான ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு  நிலை வருகிறது. 

இந்த மூன்று சட்டங்களும் உணவு பாதுகாப்பை சீரழித்து விடும் என்றும், இச்சட்டங்கள் மூன்றும் முழுக்க முழுக்க தனியார் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது எனவும், ஆகவே இந்த மூன்று கருப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டக் காலத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். திமுக தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மு. க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில்,  விவசாயிகளுக்கு எதிரான இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்களை இன்று அவையில் முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது, வேளாண் தொழில் பெருகவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, இம்மாநிலத்தின் வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து, வேளாண்மை துறையின் பெயரினை வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை என மாற்றி ஒரு உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக கொண்டு வந்த சட்டங்கள் முறையே

விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிபம் சட்டம்-2020 (ஊக்குவிப்பு மற்றும் உதவுதல்), விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம் (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாத்தல் 2020) அத்தியாவசிய பொருட்கள் திருத்தம் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களும் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்பதால் அவை ஒன்றிய அரசினால் ரத்து செய்யப்பட வேண்டும் என இந்த சட்டமன்றம் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது என அதில் முன்மொழியப்பட்டுள்ளது.
 

click me!