மதனுக்கு டிஎன்ஏ பரிசோதனை பண்ணுங்க .. ஓங்கி குத்திய இந்து முன்னணி.

By Ezhilarasan Babu  |  First Published Aug 28, 2021, 11:06 AM IST

வழக்கம் போல ஊர்வலம் நடத்தவும், அரசு அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேபோல தமிழக பாஜக பிரமுகர்  கே.டி ராகவன் விவகாரத்தில் வீடியோ வெளியிட்டு இன்னும் பல தலைவர்களின் வீடியோக்கள் உள்ளதாக கூறி வரும் மதன் ரவிச்சந்திரன் ஒரு சரியான  நபர் அல்ல.


பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரான கே.டி ராகவன் குறித்து ஆபாச வீடியோ வெளியிட்டதுடன், இன்னும் பல பாஜக தலைவர்களின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக கூறி அதிரடி கிளப்பிவரும் மதன்  ரவிச்சந்திரனுக்கு முதலில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஆவேசம் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் எப்படி  கொண்டாட வேண்டும் என்பது குறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், கட்சி நிர்வாகிகளுடன் கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அவர்கள் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.  அந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 

Tap to resize

Latest Videos

இந்து முன்னணி தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை உருவாக்கி உள்ளது. அதனால்தான் ஆண்டு தோறும் அரசின் அனுமதியுடன் வெகு விமர்சியாக விநாயகர் சக்தி தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தீவிரமாக இருந்ததால் மிக எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இப்போது அது குறைந்து கொண்டே வருவதால், இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரமலான், பனிமய மாதா திருவிழா போன்ற பண்டிகைகள் அனைத்தும் கொண்டாடபட்டுள்ள நிலையில், இந்து முன்னணி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறது. அதேபோல தமிழகத்தில் கொரோனா அச்சமின்றி டாஸ்மாக்கும் படுஜோராக நடைபெற்று வருகிறது. எனவே இந்த ஆண்டு 1லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலைகளை தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட திட்டமிட்டுள்ளோம். 

undefined

வழக்கம் போல ஊர்வலம் நடத்தவும், அரசு அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேபோல தமிழக பாஜக பிரமுகர்  கே.டி ராகவன் விவகாரத்தில் வீடியோ வெளியிட்டு இன்னும் பல தலைவர்களின் வீடியோக்கள் உள்ளதாக கூறி வரும் மதன் ரவிச்சந்திரன் ஒரு சரியான  நபர் அல்ல. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தொகுப்பாளராக வரும் பெண்ணை மதன் பல ஊர்களுக்கு  கூட்டிக்கொண்டே சுற்றியுள்ளார். அந்தப் பெண்ணிற்கும் மதனுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என காடேஸ்வரா சுப்ரமணியம் காட்டமாக வலியுறுத்தினார். 

தமிழக பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரான கே.டி ராகவன் குறித்த ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்ட  மதன் ரவிச்சந்திரன், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவை தான் வெளியிடுவதற்கு அண்ணாமலையே காரணம் என பகீர் கிளப்பியுள்ள  மதன் ரவிச்சந்திரன்  இன்னும் பல பாஜக தலைவர்களின் வீடியோக்கள் தன்னிடம் உள்ளதாகவும் பாஜகவை எச்சரித்துள்ள நிலையில், காடேஸ்வரா சுப்பிரமணியம் இவ்வாறு மதனை விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!