’உனக்கெல்லாம் இவர்தான்மா லாயக்கு...’ பிரேமலதாவுக்கு லோக்கலாக இறங்கி பதிலடி கொடுத்த ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Mar 8, 2019, 5:08 PM IST
Highlights

திமுக பொருளாளர் துரைமுருகனை கடுமையாக விமர்சித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு திமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

திமுக பொருளாளர் துரைமுருகனை கடுமையாக விமர்சித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு திமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

பிரேமலதாவுக்கு தேமுதிகவில்ம் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏவான சந்திரசேகர் ஈரோட்டில் பதிலளித்துள்ளார் அதில், ’’விஜயகாந்த் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசி, பிரேமலதா பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துகிறார். பேரத்தை வலுப்படுத்தவே தி.மு.க.விடம் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முயல்கிறது. கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின் அனுமதி மறுத்ததாக திரும்ப திரும்ப பொய் கூறி வருகிறார் பிரேமலதா. அறைக்குள் அடைபட்ட எலிபோல அங்கும் எங்கும் ஓடிகொண்டிருக்கிறார். உயிருக்கு பயந்த எலி போன்ற நிலைக்கு பிரேமலதா தள்ளப்பட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன் பேசிய விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன், ‘எங்கள் வீட்டு வாசலில் கியூவில் நிற்கிறார். நாங்கள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது எனக் கொக்கரித்தார். இன்றைக்கு யார் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறர்கள். யார் காலை பிடித்து கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள். திரும்பத் திரும்ப ஒரே பொய்யை சொல்லி வருகிறார். துரைமுருகனுடன் முக்கால் மணி நேரம் பேசி விட்டு வெளியே வந்த வரும் போது பத்திரிக்கையாளர்கள் பார்த்து விட்டார்கள் என்பதற்காக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறார்கள்.

கூட்டணி குறித்து திமுகவிடம் பேச நாங்கள் என்ன முட்டாள்களா? எனக்கேட்கிறார் பிரேமலதா. உங்களை நம்ப தமிழக மக்கள் ஒன்றும் முட்டாள் அல்ல. நீங்கள் பேரம் பேசுவதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரேமலதா என்றைக்கு கட்சிக்குள் அடியெடுத்து வைத்தாரோ அன்றைக்கே பணம் காய்க்கும் மரமாக கட்சியை மாற்றிவிட்டார். ஒவ்வொரு தேர்தலிலும் கட்சியை வைத்துக் கொண்டு பேரம் பேசி வருகிறார் பிரேமலதா. இப்போது அந்தப் பேரத்தை துரைமுருகன் காட்டிக் கொடுத்து விட்டார். அந்த விரக்தி பிரேமலதாவை ஆத்திரபட வைத்து விட்டது. 

இப்படிப்பட்ட இழிச்செயலை செய்து விட்டு தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சனம் செய்கிறீர்களே.. அதற்கு தகுதி இருக்கிறதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். ஊழலில் திளைத்துப் போன அதிமுகவுட கூட்டணி வைத்துக் கொண்டு திமுகவை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது? திமுகவை தில்லுமுல்லு கட்சி என்கிறார். தேமுதிகவுக்கு தே.. என முதல் எழுத்துக்கு கெட்டவார்த்தையில் அர்த்தம் சொல்லி எங்களாலும் திட்ட முடியும்’’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் சந்தரகுமார். முன்னாள் எம்.எல்.ஏ., வான சந்திரகுமார் திமுகவில் தற்போது ஈரோடு தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக உள்ளார். 

click me!