பிரதமர் மோடிதான் எங்கள் டாடி... அம்மா இல்லாத நேரத்தில் அமைச்சருக்கு வந்த திடீர் பாசம்..!

By vinoth kumar  |  First Published Mar 8, 2019, 4:17 PM IST

ஜெயலலிதா என்கிற அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் தற்போது எங்களுக்கு டாடியாக இருந்து வழிநடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.


ஜெயலலிதா என்கிற அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் தற்போது எங்களுக்கு டாடியாக இருந்து வழிநடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் ஆளும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். தமிழகத்தில் எப்போதும் மதவாதத்திற்கு இடம் கிடையாது. மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா அளவில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். 

Tap to resize

Latest Videos

ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு ‘டாடி’யாக இருந்து வழிகாட்டுகிறார். மேலும் இந்தியாவை மோடியே ஆள வேண்டும். அதேபோல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரவேண்டும் என கூறியுள்ளார். 

click me!