கேப்டன் மகனை எங்கப்பா காணோம்...? பேட்மிண்டன் ஆட போயிட்டாரா...! விஜய் பிரபாகரனை வம்புக்கு இழுக்கும் இரு பெரும் கட்சிகள்..!

By Vishnu Priya  |  First Published Mar 8, 2019, 3:52 PM IST

’நூறு ஹெச்.ராஜாவுக்கு சமம், நூறு நாஞ்சில் சம்பத்துக்கு சமம், ஆயிரம் ராஜேந்திர பாலாஜிக்கு சமம் நீங்க தம்பி.’ விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும், இரண்டு பெரிய திராவிட கட்சிகளின் ஐ.டி.விங்க் நபர்களும் இப்படித்தான் கிழி கிழியென கிழித்தார்கள்.


’நூறு ஹெச்.ராஜாவுக்கு சமம், நூறு நாஞ்சில் சம்பத்துக்கு சமம், ஆயிரம் ராஜேந்திர பாலாஜிக்கு சமம் நீங்க தம்பி.’ விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும், இரண்டு பெரிய திராவிட கட்சிகளின் ஐ.டி.விங்க் நபர்களும் இப்படித்தான் கிழி கிழியென கிழித்தார்கள். 

காரணம்?..... உடல்நல குறைவினால் விஜயகாந்தின் பேச்சுத்திறனில் பாதிப்பு ஏற்பட்டது. பொது மேடைகளில் அவர் பேசியதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. விளைவு, உடல் நலன் மற்றும் குரல் வளம் இரண்டுக்குமான சிகிச்சைகளுக்காகவும் அமெரிக்கா சென்றார் அவர். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுவிட, கட்சியை மச்சான் சுதீஷ் மட்டுமே கவனித்து வந்தார். 

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வைபரேஷன் துவங்கியதால் ‘கேப்டன் சீக்கிரம் வரணும், மேடையில் பேசணும்’ என்று வர்ற்புறுத்தினர் தே.மு.தி.க.வினர். இது உடனடியாக சாத்தியமில்லை என்பதால் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய் பிரபாகரனை களமிறக்கினார் பிரேமலதா. விஜய் பிரபாகரன் பிரேமலதாவிடம் ஏக செல்லம் மட்டுமல்ல  இருவரும் நண்பர்கள் போல் பழகுவார்கள்! என்று அந்த வீட்டினை அறிந்த தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகள் சொல்வது வழக்கம். பிரேமாவும், பிரபாகரனும் இணைந்து செய்த ‘வேலையில்லா பட்டதாரி’ பட டயலாக் டப்மாஷ் செம்ம ஃபேமஸானது, இந்த விஷயத்துக்கான பெரிய ஆதாரம். 

அதனால் அமெரிக்காவில் இருந்தபடி மொபைலில் விஜய் பிரபாகரனுக்கு ‘நம்ம கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துக்க. அடிச்சு நொறுக்கிப் பேசு.’ என்று உசுப்பேற்றினாராம் அம்மா. விளைவு, விருகம்பாக்கத்திலும், காஞ்சிபுரத்திலும் நடந்த பொதுக்கூட்டங்களில் அநியாயத்துக்கு அராத்தாக பேசிவிட்டார் வி.பிரபாகரன். அவர் பேசியதிலேயே ‘எங்கப்பா நூறு கலைஞருக்கு சமம், நூறு ஜெயலலிதாவுக்கு சமம், ஆயிரம் ஸ்டாலினுக்கு சமம்’ என்ற பேச்சு இரு பெரும் திராவிட கட்சிகளையும் பெரும் கடுப்பாக்கியது. விளைவு, ‘உங்க பையனோட வாயை குறைக்க சொல்லுங்க.’ என்று விஜயகாந்த் - பிரேமலதா தரப்புக்கு கடுப்பு கோரிக்கையே வைத்தார் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்த அ.தி.மு.க. சீனியர் ஒருவர். தி.மு.க. சைடிலும் இதே மாதிரியான ரியாக்‌ஷனே இருந்தது. 

அப்போதும் அடங்காத விஜய் பிரபாகரன், அடுத்து  ’காலையில கண்முழிச்சா கூட்டணிக்காக காத்திருக்கிறவங்க முகத்துலதான் முழிக்க வேண்டியிருக்குது! கூட்டணி கேட்டு எங்களோட காலை பிடிக்கிறாங்க.’ என்று அடுத்து அவர் வீசிய வார்த்தைகளை ஆசிட்டாகத்தான் பார்த்துக் கொதித்தன இரண்டு பெரிய கட்சிகளும். மத்தியமைச்சரான பியூஸ்கோயல் விஜயகாந்தின் வீட்டை தேடி சென்று வந்ததை பிரபாகரனின் பேச்சோடு கோர்த்து மிகவும் சங்கடப்பட்டது பி.ஜே.பி.தரப்பு. 

இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு தரப்பிலுமே கூட்டணி செட் ஆகாமல் நட்ட நடுவில் நிற்கிறது தே.மு.தி.க. அக்கட்சியின் இந்த நிலைக்கான காரணமாக சொல்லப்படுபவற்றில்...”பிரேமலதாவின் தாறுமாறான நிபந்தனை பேரங்கள், விஜயபிரபாகரனின் அநாகரிகமான பேச்சுக்கள்.’ என இரண்டும் முக்கிய இடத்தைப் பிடித்தன. தொடர் பிரச்னைகளால் தே.மு.தி.க. இறங்கிப் போக ஆரம்பித்திருக்கும் சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக விஜயபிரபாகரனை சீனிலேயே காணோம். 

ஏய்! ஓய்! ஊய்! என்று குதித்து தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஒருமையில் சவால் விடுமளவுக்கு கெத்து காட்டியவர் இப்படி திடீரென சைலண்ட் ஆனதை தாறுமாறாக கிண்டலடிக்க துவங்கிவிட்டனர் அத்தனை கட்சிகளின் இளம் நிர்வாகிகளும், தொண்டர்களும். “எங்கேய்யா அந்த ஓவர் சவுண்டு விஜய் பிரபாகரன்? கட்சி பட்ட அடியில பஸ்பமாகி மறுபடியும்  பேட்மிண்டன் டீமை குத்தகைக்கு எடுக்க போயிட்டாரா? இல்லே டாக் ஷோவுக்கு நாய்களை அனுப்புறதுக்காக அதுங்களை வளர்க்கப் போயிட்டரா?” என கேட்டு கலாய்த்துள்ளனர்.

விஜய் பிரபாகரன் பேட்மின்டனில் ஆர்வமுடையவர், சென்னையை பேஸாக  கொண்ட டீமினை குத்தகைக்கு எடுத்த ஓனர்! என்பதையும், அவருக்கு நாய் வளர்ப்பில் ஆர்வம் அதிகம், அவரது நாய்கள் சென்னை, கேரளா என்று இந்தியாவில் மட்டுமில்லாமல் இத்தாலி வரை ஷோக்களில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்துள்ளன என்பதை இங்கே கோடிட்டுக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். விடுங்க விஜய்! இதெல்லாம் அரசியல்ல ஜகஜம்! ஆங்.....

click me!