அதிமுக அமைச்சரே பா.ம.க.வை தோற்கடிப்பார்... அசிங்கப்படுத்தி அலற வைக்கத் துடிக்கும் தி.மு.க..!

By Vishnu PriyaFirst Published Mar 8, 2019, 5:05 PM IST
Highlights

தன்னை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த பா.ம.க. மீது கடும் கோபத்தில் இருக்கிறார் அமைச்சர் அன்பழகன். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் அமைச்சர் அன்பழகன் நிச்சயம் பா.ம.க.வை ஜெயிக்க வைக்கமாட்டார். தோற்கடித்து தன் ஆண்மையை நிரூபிப்பார். அதேபோல் கொலை விவகாரத்தால் மனக்காயப்பட்டிருக்கும் அமைச்சர் சி.வி. சண்முகமும் பா.ம.க.வை நிச்சயம் தோற்கடித்து பழிக்கு பழி வாங்கியே தீருவார்.

அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் ஸ்டாலின் உதிர்த்த ‘சூடு, சொரணை இருக்குதா?’ எனும் விமர்சனமும், அவரது அந்த விமர்சனத்தை, அன்புமணியின் சொந்த மச்சானான காங்கிரஸ் செயல்தலைவர் விஷ்ணு பிரசாத் வழிமொழிந்ததையும் தமிழக அரசியலரங்கம் என்றுமே மறக்காது. 

தி.மு.க. துவக்கி வைத்ததைப் பிடித்துக் கொண்டுதான் எல்லோரும் சரமாரியாகப் போட்டுத் தாக்கி வருகிறார்கள் அந்த கூட்டணியை. இதனால் பா.ம.க. மிகப்பெரும் மன வருத்தத்துக்கு ஆளாகியிருப்பது நிதர்சனம். காய்ந்து கிடந்த காற்றில் நெருப்பை பற்றவைத்ததோடு தி.மு.க. ஒதுங்கிக் கொண்டிருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் அதை செய்யாமல், நெருப்பின் வீச்சு குறையும்போதெல்லாம் சில லிட்டர் டீசலை எடுத்து வீசி அதன் கோரத்தை அதிகப்படுத்துவதுதான் டாக்டர்கள் இருவரையும்  பேஷண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஒரு காலத்தில் பா.ம.க.வின் எம்.எல்.ஏ.வாக இருந்து பின் அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்த எடப்பாடி காவேரி என்பவர் இக்கூட்டணி பற்றி லேட்டஸ்டாக தட்டி விட்டிருக்கும் விமர்சனம் மிக உக்கிரமானது. 

அப்படி என்ன சொல்லியிருக்கிறார் காவேரி? தெரியுமா!.... “பா.ம.க.வை நன்கு அறிந்தவன் எனும் முறையில் சொல்கிறேன், அவர்களை கூட்டணியில் சேர்த்திருப்பது என்பது அ.தி.மு.க.வுக்கு பெரிய பலஹீனம்தான். மாறி மாறி கூட்டணி அமைப்பது கூட பிரச்னையில்லை. ஆனால், படு கேவலமாக ஆட்சியையும், ஆள்வோரையும் விமர்சனம் செய்துவிட்டு இப்போது அங்கே போய் சேர்ந்திருப்பதென்பது மக்களை ஏமாற்றும் செயல். உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனை ஆண்மையில்லாதவர் என விமர்சனம் செய்துவிட்டு, சட்டத்துறை அமைச்சர் உறவினரை கொலை செய்துவிட்டு, அதே கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது வன்னியார் சமூக மக்களிடையே கோபத்தையும் அருவெறுப்பையும் உருவாக்கியுள்ளது. 

தன்னை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த பா.ம.க. மீது கடும் கோபத்தில் இருக்கிறார் அமைச்சர் அன்பழகன். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் அமைச்சர் அன்பழகன் நிச்சயம் பா.ம.க.வை ஜெயிக்க வைக்கமாட்டார். தோற்கடித்து தன் ஆண்மையை நிரூபிப்பார். அதேபோல் கொலை விவகாரத்தால் மனக்காயப்பட்டிருக்கும் அமைச்சர் சி.வி. சண்முகமும் பா.ம.க.வை நிச்சயம் தோற்கடித்து பழிக்கு பழி வாங்கியே தீருவார். இரு அமைச்சர்களும் மானஸ்தர்கள். நிச்சயம் இதை செய்துமுடிப்பார்கள். 

இவர்கள் இருவரின் எதிர்ப்பையும் தாண்டிதான் எடப்பாடியார் இந்த கூட்டணியை முடிவு செய்துள்ளார். எனவே கோபத்தை மனதினுள் பூட்டி வைத்துள்ளர் அமைச்சர்கள். மிக நிச்சயமாக அதை தேர்தலில் காட்டி பா.ம.க.வை வன்மமாக தோற்கடிப்பார்கள்.” என்று பேசியுள்ளார். ஹும்! எப்படியெல்லாம் தூண்டிவிடுறாங்க பாருங்க. கூட்டணி பற்றி மோசமான ஒரு கருத்தை சொல்லி அசிங்கப்படுத்தியது மட்டுமில்லாமல், பிரசாரம் துவங்கப்பட்ட நிலையிலேயே இந்த மாதிரி பேசி அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே சந்தேக உரசலையும், மோதலையும் உருவாக்க தி.மு.க. முயல்வதி அரசியல் சாணக்கியத்தனம் என்று சொல்வதா இல்லை சண்டித்தனம் என்று விமர்சிப்பதா?

click me!