
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை இழந்துவிட்டதால் தமிழக சட்டப் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 ng;h ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் பெரும்பான்மையை இழந்து விட்டார் என்றும், சட்டப்பேரவையில் அவர் தனது அரசின் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை நேரில் சந்தித்து , சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனு அளித்தார்.
இந்நிலையில் திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டதால் சட்டப் பேரவையை கூட்டி பலத்தை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டப் பேரவையில் முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையைக் கூட்டினால் திமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர திமுக என்றுமே விரும்பியதில்லை என்றும், சட்டரீதியாகவே அதை சந்திக்க உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.