
தடைகளை தாண்டி எடப்பாடி அணி பொதுக்குழுவை பிரம்மாண்டமாக நடத்தி முடித்ததோடு மட்டுமில்லாமல் தனக்கும், சசிகலாவுக்கும் நாக் அவுட் கொடுத்து தீர்மாணம் இயற்றியிருப்பதில் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் தினகரன்.
இதனால் ‘இது பொதுக்குழுவே அல்ல. பழனிசாமியும், பன்னீரும் இணைந்து நடத்திய பொதுக்கூட்டம். அவ்வளவே!’ என்று தாக்கியவர் அவர்களுக்கு எதிராக சில சவால்களையும், சாபங்களையும் அள்ளிப்போட்டார்.
அப்படியே தன் பேச்சுவாக்கில் தமிழக கவர்னரின் மீதும் பாய்ந்திருக்கிறார் தினகரன். அதாவது..‘’இந்த அரசு தனது மெஜாரிட்டியை இழந்துவிட்டது. சட்டமன்றத்தை கூட்டி ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல உத்தரவேண்டியது கவர்னரின் கடமை. ஆனால் அதை செய்ய அவர் தயங்குகிறார்.
இதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். தன் கடமையை செய்ய கவர்னர் தயங்குவதால், கவர்னர் பதவி மீதிருக்கும் மாண்பு மற்றும் மரியாதை தமிழகத்தில் குறைந்து வருகிறது.
இன்னும் இரண்டு நாட்கள் வரை கவர்னர் மீது நம்பிக்கை வைத்துக் காத்திருப்பேன். அப்படி அவர் உரிய நடவடிக்கை எடுத்து உத்தரவிடவில்லை என்றால் எனது அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன்.
அதேவேளையில் அம்மா வழியில் நடக்காத, மக்களுக்கு நன்மை செய்யாத இந்த அரசை வீட்டுக் அனுப்ப வேண்டிய வேலைகளில் நான் இறங்கிவிட்டேன்.” என்று சொல்லியிருக்கிறார்.
தினகரனின் இந்த சுரீர் பேச்சுக்கு ஆளுநர் மாளிகையின் ரியாக்ஷன் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.