"ஸ்டாலினே அடுத்த முதல்வர்" : 59% மக்கள் ஆதரவு!!

First Published Jun 24, 2017, 1:30 PM IST
Highlights
stalin is the next chief minister says poll


தமிழகத்தில் இருந்து வரும் குழப்பமான சூழ்நிலையில் தேர்தல் நடந்தார் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்ற கருத்து கணிப்பில் 59 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல், பஞ்சரான வாகனம்போல் படுத்துக் கொண்டது. ஜெயலலிதா மறைந்துவிட, கருணாநிதி முடங்கிவிட 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்ட தலைவர்களால் தலைமை தாங்கப்படும் நிலைக்க தமிழக அரசியல் தள்ளப்பட்டது.

ஸ்டாலின், எடப்பாடி, ஓ.பி.எஸ்., தமிழிசை, சீமான், திருநாவுக்கரசர், அன்புமணி போன்று 80-களுக்குப் பிறகு தலையெடுத்த தலைவர்கள் தலைமை தாங்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரெடிமேட் உப்புமா, ரெடிமேட் தயிர் சாதம்போல் திடீர் என ரெடிமேடாக முதல்வராக தயாரான எடப்பாடி, தமிழக அரசியலில் தலைவராக உலா வருகிறார்.

ஸ்டாலின், எடப்பாடி போன்றோர் முன்னணி தலைவராக தமிழக அரசியலில் உலா வரும் நிலையில் ஸ்திரமற்ற தமிழக அரசியலின் அடுத்த கட்டமாக அதிமுக ஆட்சி தொடருமா? கவிழுமா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது.

அடுத்த முதல்வர் யார்? என்ற விவாதமும் தமிழக அரசியலில் தொடர்ந்து வருகிறது. அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி ரஜினி, அரசியல் கட்சி துவங்க முனைப்பு காடடி வருகிறார். நடிகர் விஜய்-க்கும் அரசியலில் குதிக்க ஆசை வந்துள்ளது.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத இந்த நேரத்தைப் பயன்படுத்தி தங்கள் முதல்வர் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதில் அனைவரும் ஆசைப்படுகின்றனர்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் தலைவராக ஓ.பி.எஸ். பெரும்பான்மையான கட்சி தொண்டர்களின் ஆதரவை பெற்று வருகிறார். 

ஆட்சி இல்லாவிட்டால் எடப்பாடியால், ஒரு எம்.எல்.ஏ. கூட ஜெயித்துக் காட்ட முடியாது என்று அதிமுக தொண்டர்கள் பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தால், திமுகவிற்கே அதிக வாய்ப்பு உள்ளது என்றும், ஸ்டாலினே முதல்வர் ஆவார் என்றும் திமுக தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இன்றுள்ள அரசியல் தலைவர்களில் நீண்டகால அனுபவம் மிக்கவர் மு.க.ஸ்டாலின் என்பது ஒருபுறம் இருந்தாலும், சமீபத்தில் அரசியலுக்கு வந்த தமிழிசை, எடப்பாடி, போன்றோருடன் அரசியல் செய்ய வேண்டிய நிலை மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

பல விஷயங்களில், ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிபோல் முனைப்பு செயல்படவில்லை என்ற விமர்சனமும் அவர்மேல் இருந்தாலும், தமிழகத்தில் அதிக அளவிலான மக்கள் விரும்பும் ஒரு தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த நிலையில், சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் பண்பாடு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்து கணிப்பின் தமிழக முதல்வராக ஆவதற்கு யாருக்கு வாய்ப்பு அதிகம் என்ற கேள்விக்கு அனைவரையும் புறம் தள்ளிவிட்டு மு.க.ஸ்டாலின் 59 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளார்.

அதற்கு அடுத்த இடத்தில், ஓ.பி.எஸ். 13 சதவீதத்தையும் கட்சியையே ஆரம்பிக்காத ரஜினிகாந்த் 11 சதவீதத்தையும், அன்புமணி ராமதாஸ் 7 சதவீதத்தையும், தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி 1 சதவீதத்தையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம், தனக்கு அடுத்த கட்ட இடத்தில் உள்ள எடப்பாடியைவிட 58 சதவீத ஆதரவை அதிகமாக பெற்று யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

click me!