ஸ்டாலினுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு!!

First Published Jun 24, 2017, 1:11 PM IST
Highlights
admk mla meeting with stalin


பேரறிவாளன் பரோல் பிரச்சனை குறித்து தமிழக சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியதற்காக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அதிமுக தோழமைக்கட்சி எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தந்தை உடல்நலம் இல்லாமல் இருப்பதால் அவரை பரோலில் விட அனுமதி அளிக்க வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பேரறிவாளனை பரோலில் விடுவது தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று  நேற்று சட்டப்பேரவையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு மன்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர்  சபாநாயகர் தனபாலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் பேரோல் பிரச்சனை குறித்த சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப வேண்டும் என இந்த 3 எம்எல்ஏக்களும் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே இன்று சட்டப் பேரவையில் பேசிய  மு.க.ஸ்டாலின் பேரறிவாளன் பரோல் பிரச்சனை குறித்த சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் போரறிவாளன் பரோல் பிரச்னை குறித்த சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டானுக்கு , அதிமுகவின் தோழமைகட்சி எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

click me!