எடப்பாடிய ஸ்டாலினே மதிப்பதில்லை... மக்கள் எப்படி மதிப்பாங்க? ஆர்பி உதயகுமார் கேள்வி!!

By Narendran S  |  First Published Sep 11, 2022, 8:45 PM IST

இமானுவேல் சேகரன் விழாவை அரசு விழாவாக அறிவிப்பதற்கு சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 


இமானுவேல் சேகரன் விழாவை அரசு விழாவாக அறிவிப்பதற்கு சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இன்று காலை இமானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான செல்லூர் கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினர். இதனை தெடர்ந்து  இமானுவேல் சேகரனின் மகள் பிரபாராணி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திமுக மாநில இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதிய பத்திரிகையாளரை கைது செய்தது நியாயமா ? கொந்தளித்த சீமான் !

Tap to resize

Latest Videos

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சாந்துர் ராமசாந்திரன் பெரிகருப்பன், தங்கம் தென்னரசு, கயல்விழி, எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதய குமார் தலைமையில் இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் எம்.பி தர்மர்  மற்றும் முன்னாள் எம்பி பாலகிருஷ்ணன் ஆகியோர்கள் தரப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்... பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், சட்டமன்றத்தில் இமானுவேல் சேகரன் விழாவை அரசு விழாவாக அறிவிப்பதற்கு வலியுறுத்துவோம். திமுக ஆட்சியில் மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான விலைகளை உயர்த்தி விட்டது தான் சாதனை. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வர் உள்ளிட்டோர் மதிப்பதில்லை. பின்பு எப்படி தமிழக மக்களை மதிப்பார்கள்? 

click me!