கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்... பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!!

By Narendran S  |  First Published Sep 11, 2022, 8:08 PM IST

காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் மிகப்பெரிய குழப்ப நிலையை மறைக்கவே ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் மிகப்பெரிய குழப்ப நிலையை மறைக்கவே ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி அருகே நரிக்குளம் பாலத்தில் அந்தப் பாலத்தின் திறப்பு விழா தொடர்பான பிரதமர் மோடி பெயர் இடம்பெற்றிருந்த பெயர் பலகை உடைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி மீது வழக்குத் தொடர வேண்டும்.

இதையும் படிங்க: “60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?

Tap to resize

Latest Videos

காவல் நிலையத்தில் பாஜக சார்பில் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் அவரது பெயரை பதிவு செய்யாமல் யாரோ உடைத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ராகுல் காந்தி வருகை தொடர்பாக கே.எஸ். அழகிரி  ஒரு வார காலம் குமரி மாவட்டத்தில் தங்கியிருந்து திட்டமிட்டுள்ளார். 1947 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதையும் படிங்க: “பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்

அது இப்பொழுது போய்விடுமோ என்ற அச்சம் இவர்களுக்கு வந்துள்ளது. 1969 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. இப்பொழுதும் மீண்டும் ஒரு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சோனியா காந்தி குடும்பத்திற்கு எதிர்ப்பு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது மிகப்பெரிய குழப்பம் நிலை வருகிறது. அந்த பிரச்சனையை மறைக்கத்தான் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார். 

click me!