“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?

By Raghupati R  |  First Published Sep 11, 2022, 6:50 PM IST

அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.


கடந்த ஜூலை 11 அன்று ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இரு தரப்பும் மோதிக் கொண்டதில் காவலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடம் அதிமுக அலுவலக சாவியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“திருப்பூரில் 20 ஆயிரம் டி-சர்ட்.. ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை என்ன ?”.. கே.எஸ் அழகிரி கொடுத்த விளக்கம்.!

‘ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் இல்லாதபோது அதிமுக அலுவலகத்தின் அதிகார உரிமையை கோர முடியாது. ஓ.பன்னீர்செல்வம்  கட்சி தலைமையகத்தின் சாவியை தன் வசம் ஒப்படைக்க கோருவதில் எந்த முகாந்தரமும் இல்லை. மேலும் ஓபிஎஸ் பண விவகாரங்களில் கையாடல்கள் நடத்தியுள்ளார், எனவே இவ்வாறு கையாடல் நடத்திய ஒருவருடம் எவ்வாறு நீதிமன்றம் அலுவலக சாவியை ஒப்படைக்கக்கூடாது, ஒப்படைக்க முடியாது. 

அதேபோல அதிமுக அலுவலகத்தில் ஒபிஎஸ் தன் தரப்பு ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டார், பொருட்களை சேதப்படுத்தியுள்ளார், இவ்வாறு கட்சியிக்கு எதிராக நடக்கு ஒருவர் அலுவலக நிர்வாக உரிமையை கோர முடியாது. எனவே ஓ.பி.எஸ் அதிமுக அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மேல்முறையீட்டு மனெவை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தனது பதில் மனுவில் கோரியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமை அலுவலகம் வந்தபோது மூத்த தலைவர்கள் பலர் வராமல் புறக்கணித்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அப்போது கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா ஆகியோர் சந்தித்துள்ளனர். சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர், வளர்மதி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வரவில்லை.  

மேலும் செய்திகளுக்கு..மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !

முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் என அனைவரும் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் வராதது எடப்பாடி தரப்பிடையே பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களில் 96 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது என்று கூறும் நிலையில் தற்போது ஒவ்வொருவராக பின்வாங்கி வருகிறார்கள். 

ஒருவேளை இவர்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு செல்கிறீர்களா அல்லது சசிகலா தரப்புக்கு செல்கிறீர்களா என்ற சந்தேகி ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவர்களது ஆதரவாளர்களுக்கு முறையான மரியாதையை இல்லாமல் இருப்பதால் தான் அதிமுகவின் முக்கிய தலைகள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கட்சி பணத்தில் கையாடல் செய்த ஓபிஎஸ்.. அதிமுகவில் அவர் இல்லை.. கோர்ட்டில் பரபரப்பை கிளப்பிய எடப்பாடி பழனிசாமி

click me!