
சென்னை ஆர்.கேநகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேதாஜி நகர் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையிடப்படும் என தெரிவித்தார்.
அப்படி விசாரணை நடத்தும் பட்சத்தில் சசிகலா தரப்பினர் மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பினரையும் விசாரிக்க வேண்ட வரம் என ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ்க்கு முழு விபரங்களும் தெரியும் என்றும், தற்போது அவற்றை மறைப்பதாகவும் கூறினார் .
ஆனால் பதவி பறிபோன பின்பு நீதி விசாரணை வேண்டும் என்று அவர் கேட்பது அவர் நடத்தும் நாடகம் என தெரிவித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வாயைத் திறக்காத ஓபிஎஸ் தற்போது கூப்பாடு போடுவதில் நியாயம் இல்லை என ஸ்டாலின் கூறினார்.
தினகரன் தரப்பினர் பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறார்கள் ஆனால் அவர்களின் எண்ணம் பலிக்காத என தெரிவித்த ஸ்டாலின், அமைச்சரின் வீட்டில் வருமான வரி சோதனை என்பது மரபில்லை என்றாலும், அந்த அளவுக்கு அத்துமீறல் நடந்துள்ளது எனவும் மு.க.ஸ்டாலினி கூறினார்.