
அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் வருமானவரி அதிகாரிகள்.
இது தொடர்பாக, விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, அண்ணன் உதயகுமார் ஆகிய இருவரையும் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து, 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய அதிகாரிகள், கிடைத்த தகவலை அடுத்து மலைத்து போயுள்ளனர்.
நான்கு பக்கங்கள் கொண்ட அந்த பட்டியலில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையிலான அணி, தேர்தல் தொடர்பான பணப்பட்டுவாடா செயல் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளது.
ஒரு வாக்காளருக்கு கொடுக்க வேண்டிய பணம் எவ்வளவு? என்றும் எத்தனை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்? என்ற லிஸ்டையும் அந்த அணியே தயார் செய்துள்ளது.
இந்த திட்டத்தை, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார் என்பது இந்த நேரத்தில் நினைவுகூரத்தக்கது.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் செலவுக்கான தொகையை விஜயபாஸ்கர் ஒரு வாரத்தில் திரட்டியதாகக் கூறப்படுகிறது.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றிடமிருந்து இந்தப் பணம் வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, ஓர் அமைச்சரால், ஒரு வாரத்தில் ரூ.125 கோடியை வசூலிக்க முடியும் என்றால், அ.தி.மு.க. அமைச்சர்கள் கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு வசூலித்து இருப்பார்கள்? என்று யோசிக்க வேண்டியுள்ளது.
அமைச்சர்களை விடுவோம், முதல்-அமைச்சராக இருந்தவர்கள் எத்தனைக் கோடிகளை குவித்திருப்பார்கள்? இதை எல்லாம், கணக்கிட்டுப் பார்த்தாலே தலையை சுற்றும். அந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் அல்லவா?.
இவர்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்தாலே, தமிழத்தின் ஒட்டு மொத்த கடனையும் அடைத்து விடலாமே? அதை யார் செய்வது?