கள ஆய்வில் ஒரு சுவாரசியம்… ஸ்டாலின் காலில் விழுந்த கல்யாண ஜோடி…

By manimegalai aFirst Published Nov 8, 2021, 8:12 PM IST
Highlights

சென்னையில் வெள்ள பாதிப்பு தொடர்பான கள ஆய்வில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டிருக்க திடீரென ஒரு கல்யாண ஜோடி அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது.

சென்னை: சென்னையில் வெள்ள பாதிப்பு தொடர்பான கள ஆய்வில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டிருக்க திடீரென ஒரு கல்யாண ஜோடி அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தை பதம்பார்த்து வருகிறது. குறிப்பாக விட்டேனா பார் என்று வேகத்தில் தலைநகர் சென்னையை உலுக்கி வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீராலும், வெள்ளத்தாலும் சூழ்ந்து இருக்கின்றன.

2 நாட்களாக சென்னையை விடாமல் வடகிழக்கு பருவமழையானது தட்டி தூக்கி இருக்கிறது. 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்பை சென்னையில் மீண்டும் நேருமோ என்று அச்சம் எழுந்தது.

சென்னை மட்டுமல்லாது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பல மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதி அதி கனமழையை தரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர் மழையால் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். 2வது நாளாக இன்றும் பல பகுதிகளுக்கு சென்ற அவர் ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

சென்னையில் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் அவர் நேரில் சென்று பார்வையிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார்.

கள ஆய்வு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சென்னை கொடுங்கையூர் பகுதி மழை, வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. அதை அறிந்து அந்த பகுதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்றார்.

அப்போது அங்கு திருமணம் செய்து கொண்ட புத்தம்புது ஜோடி முதல்வர் வருகைக்காக காத்திருந்தது. அவர் வந்தவுடன் டக்கென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது. புதுமண தம்பதி முதல்வர் ஸ்டாலினிடம் ஆசி பெற்ற இந்த போட்டோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டோ இணையத்தில் வெளியான மறு நொடியே வாழ்த்து மழை பொழிய ஆரம்பித்தது. அதே நேரத்தில் மறுபக்கம் விமர்சனங்களும் எழ ஆரம்பித்தன. இந்த போட்டோவையும், முதல்வர் ஸ்டாலின் ஆசிர்வாதத்தையும் கிண்டல் செய்யும் குசும்பு நெட்டிசன்ஸ் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

திராவிடம் என்றால் என்ன? சுயமரியாதை தான் திராவிடம்… காலில் விழுவது தான் திராவிடமா? என்று பட்டிமன்ற ரேன்ஜூக்கு போட்டு தாக்க ஆரம்பித்து உள்ளனர். காலில் விழாதவர்கள் தான் சுய மரியாதையோடு இருப்பவர்கள் என்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

வயதில் மூத்தவர் முதல்வர் ஸ்டாலின் தான்.. ஆனாலும் கூட இந்த காலில் விழும் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று லேசுபாசாக கருத்து தெரிவித்த நபர்களும் இருக்கின்றனர்.  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதேபோன்று ஆய்வு செய்த போது வராத திருமண ஜோடி இப்போது மட்டும் எப்படி? வொய் திஸ் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அட போங்கப்பா… இதற்கெல்லாம் ஒரு விமர்சனமா…? கல்யாண ஜோடிதானே வாழ்த்திவிட்டு போங்க என்று ஒரு க்ரூப் கம்பு சுத்தி வருவது தனிக்கதை..!

 

சென்னையில் மழை வெள்ளத்தை ஆய்வு செய்த போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் மணமக்கள் ஆசி பெற்றனர். pic.twitter.com/QUe6MTMstO

— CMOTamilNadu (@CMOTamilnadu)
click me!