ஈரோடு இடைத்தேர்தல்..! ஈவிகேஎஸ்காக களத்தில் இறங்கும் ஸ்டாலின், உதயநிதி- பிரச்சாரத்திற்கு தேதி குறித்த திமுக

By Ajmal KhanFirst Published Feb 8, 2023, 9:43 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்க்கு ஆதரவாக வருகிற 24 மற்றும் 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் உதயநிதியும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். இதன் காரணமாக அந்த தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அமமுகவிற்கு குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதன் காரணமாக எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட ஆர்.என் ரவி.! தமிழக அரசின் செயல்பாடு தொடர்பாக அமித்ஷாவை சந்திக்க திட்டமா.?

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

மேலும் டிடிவி தினகரன் அணி கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் ஓட்டுகளை பிரித்த நிலையில் அந்த ஓட்டுக்கள் தற்போது எடப்பாடி அணிக்கு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே பல முனை போட்டி என எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் - அதிமுக இடையேயான போட்டியாக மாறிவிட்டது.  ஒன்றரை வருட திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண் என்ற அடிப்படையில் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என திமுக களத்தில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை விட திமுகவின் நிர்வாகிகள் அதிகளவில் ஈரோட்டில் குவிந்துள்ளனர்.

தீவிர பிரச்சாரத்தில் திமுக-அதிமுக

அதே நேரத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கொங்கு மண்டலம் எங்களது கோட்டை என நிரூபிக்க அதிமுக தயாராகி வருகிறது. அதற்காக 100க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணி தனித்தனியாக நியமித்துள்ளனர். இந்தநிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வருகிற 24  மற்றும் 25ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல உதயநிதியும் பிப்ரவரி 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சரும் ஈரோடு தொகுதி பொறுப்பாளருமான முத்துசாமி மேற்கொண்டு வருகிறார். 

இதையும் படியுங்கள்

பாஜகவை தோளில் சுமந்து திரியும் அதிமுக.! இரட்டை இலையில் போட்டியிட்ட ஜெயலலிதாவே தோல்வி அடைந்தார்.! -சிபிஎம்

click me!