தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அறிக்கை அளிப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழக அரசும்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு மசோதாவிற்கு ஒப்புதல் தருவதில் ஏற்பட்ட காலதாமதம் தற்போது ஆன்லைன் சூதாட்ட மசோதா வரை தொடர்கிறது. இது ஒரு புறம் என்றால் அரசு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்என் ரவி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பேசி வருவதாகவும் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றி ஆளுநர் தமிழ்நாடு, அண்ணா, கலைஞர், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை கூறாமல் தவிர்த்தார்.
ஆவடி மாநகர செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் நாசர் மகன் விடுவிப்பு... அறிவித்தார் துரைமுருகன்!!
டெல்லிக்கு புறப்பட்ட ஆளுநர் ரவி
இதன் காரணமாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையேயான மோதல் போக்கு அதிகரித்தது. ஆளுநரின் செயல்பாட்டிற்கு பல்வேறு கண்டனங்களும் எழுப்பப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் ஆர் என் ரவி மீது குடியரசு தலைவரிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அப்போதே டெல்லிக்கு சென்ற ஆளுநர் ரவி, தமிழக அரசின் புகார் தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனையடுத்து தமிழ்நாடு தொடர்பாக தனது பேச்சை தவறாக புரிந்து கொண்டதாக ஆளுநர் ஆர் என் ரவி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். இந்தநிலையில் தற்போது ஆளுநர் ரவி இன்று காலை அவரசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அறிக்கை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதிற்கு இது தான் காரணம்? ஜெய பிரதீப் புது விளக்கம்..!