பாஜகவை தோளில் சுமந்து திரியும் அதிமுக.! இரட்டை இலையில் போட்டியிட்ட ஜெயலலிதாவே தோல்வி அடைந்தார்.! -சிபிஎம்

By Ajmal KhanFirst Published Feb 8, 2023, 9:06 AM IST
Highlights

அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லையென தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறினார்.

பேனா சிலை- சிபிஎம் கருத்து

சேலத்தில் செய்தியாளர்களை சந்தத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய நிலை அறிக்கையில் நூறு நாள் வேலை திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதனை கண்டித்து வருகிற 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் விவகாரத்தில், சர்ச்சை இல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் பேனா சிலை அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதிற்கு இது தான் காரணம்? ஜெய பிரதீப் புது விளக்கம்..!

பாஜகவை தோளில் சுமக்கும் அதிமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தவர்,  அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலை இருப்பதாக கூறினார். ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை  சின்னத்தை திரும்ப பெற்றதால் இரட்டை இலை எடப்பாடி அணிக்கு கிடைத்தாக கூறினார்.  அதிமுக வேட்பாளர் இரட்டை இலையில் நின்றால் வெற்றி பெற்று விடலாம் என்பது உண்மையல்ல. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தான் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்தார். பாஜகவை தோளில் சுமந்து திரிவதால் அதிமுகவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறினார்.

இதையும் படியுங்கள்

அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட ஆர்.என் ரவி.! தமிழக அரசின் செயல்பாடு தொடர்பாக அமித்ஷாவை சந்திக்க திட்டமா.?

click me!