ஒரே நாடு ஒரே தேர்தலை அப்போ எதிர்த்த இபிஎஸ்... இப்போ ஆதரிப்பது ஏன்.? அதிமுக பலிகிடா ஆகும்- சீறும் ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Sep 3, 2023, 11:57 AM IST

 ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் சட்டசபையில் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் காத்திருப்பீர்களா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 


ஒரே நாடு ஒரே தேர்தல் - அதிமுக பலிகிடா

சென்னை திருவொற்றியூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மண்மக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசினார். திமுகவில் வாரிசு உள்ளது என கூறுகின்றனர். அது உண்மை தான் கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம் என தெரிவித்தார். இந்தியா கூட்டணி கூட்டங்களை பார்த்து அச்சம் கொண்ட பாஜக நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதி திட்டத்தை தீட்டி ஓர் அதிபராக இருக்க பாஜகவினர் முயற்சி செய்கிறார்கள். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்துவிட்டு தற்போது ஆதரிக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக பலிகிடா ஆகும், அது புரியாமல் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

ஜனாதிபதி பதவியை கொச்சைப்படுத்தியிருக்காங்க

சட்டசபையில் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் காத்திருப்பீர்களா? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பாஜக சொல்வதை கேட்கவேண்டும் என்பதற்காகவே முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவிற்கு தலைவராக நியமித்து ஜனாதிபதி பதவியை கொச்சைப்படுத்தி உள்ளனர் பாஜக தேர்தல் செலவை குறைக்கிறதோ இல்லையோ கொள்ளையடிப்பதை குறைக்க வேண்டும். கேவலமாக சதித் திட்டத்தை தீட்டி அதிபராக இருக்கவேண்டுமென பாஜக முயற்சி செய்கிறது.  

யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் கவனம் தேவை

நாட்டில் நடைபெறுகிற இந்த கொடுமையான பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை காப்பாற்றியது போல இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும். எனவே இந்தியாவை காப்பாற்ற அனைவரும் இன்றே தயாராவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

ஒரே நாடு ஒரே தேர்தல்: குழுவில் இருந்து விலகிய காங்கிரஸ்!

click me!