பெற்ற மகனை இழப்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய இழப்பாகும்! அதிமுக எம்எல்ஏ மகன் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

By vinoth kumar  |  First Published Sep 3, 2023, 11:45 AM IST

பெற்ற மகனை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய இழப்பாகும். அந்த வகையில், பாசமிகு மகனை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் அன்புச் சகோதரர் அம்மன் K அர்ச்சுணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 


கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்எல்ஏவின் மகன் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

கோவை வடக்கு தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்டச் செயலாளருமான அம்மன் அர்ஜுனன் மகன் கோபாலகிருஷ்ணன். திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை  உயிரிழந்தார். அவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- அதிமுக ஆலோசனை கூட்டத்தின் தேதியை மாற்றிய இபிஎஸ்.. இதுதான் காரணமா?

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அம்மன் K. அர்ச்சுணன், MLA அவர்களுடைய மகனும், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளருமான  A. கோபாலகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இதையும் படிங்க;-  கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மகன் திடீர் மரணம்! என்ன காரணம்? அதிர்ச்சி தொண்டர்கள்..!

பெற்ற மகனை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய இழப்பாகும். அந்த வகையில், பாசமிகு மகனை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் அன்புச் சகோதரர் அம்மன் K அர்ச்சுணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என இபிஎஸ் கூறியுள்ளார். 

click me!